ஆரஞ்சு பழமாகவே மாறிய அமலா பால்!.. கன்னக்குழி அழகில் மயங்கும் ரசிகாஸ்!..

#image_title
நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரஞ்சு நிற உடையில் செம்ம க்யூட் ரியாக்ஷனுடன் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மலையாளப் படமான நீலதாமரா படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அமலா பால் வீரசேகரன், சிந்து சமவேளி போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் மைனா படத்தின் மூலமே அவர் பிரபலமடைந்தார். மைனா படத்திற்காக சிறந்த நடிகைக்கான பல விருதுகளை வென்று குவித்தார். அதன் பிறகு அமலா பாலுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

அதை தொடர்ந்து விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி,முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன், உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ள அமலா பால் ஆடை படத்தில் நடித்து பல நெகடிவ் கமெண்டுகளை பெற்று பட வாய்ப்புகளை இழந்தார்.
மேலும், நடிகை அமலா பால் இயக்குநர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டார். பிறகு இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அதன் பிறகு சில ஆண்டுகளில் அமலா பால் தனது நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் இலை என்ற ஆண் குழந்தை பிறந்தது. சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் அமலா பால் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வது, குழந்தையுடன் விளையாடுவது என பல வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிரார்.
இந்நிலையில் தற்போது அவர் ஆரஞ்சு நிற டிஷர்ட் அணிந்துக் கொண்டு ஏகப்பட்ட க்யூட் ரியாக்ஷன்களுடன் எடுத்திருந்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கர்ப்பமானதில் இருந்தே அமலா பால் நன்கு சதைப்போட்டுள்ள நிலையில், பலரும் பப்ளி கேர்ள் என கொஞ்சி வருகின்றனர்.