Connect with us

Cinema History

ரகுவரன் – அமலா காதல் கதை தெரியுமா… ரகுவரனுக்கு அமலா ஏன் `நோ’ சொன்னார்?

ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது நடிகை அமலா மீது ரகுவரன் ஒரு தலையாகக் காதல் கொண்டார். அதன்பிறகு என்ன நடந்தது?

தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஹிந்தி என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ரகுவரன். தனக்கே உரிய தனி பாணி குரலோடு இவர் பேசும் வசனங்கள் 1980களின் பிற்பகுதி தொடங்கி 1990களின் இறுதிவரை ரொம்பவே பிரபலம். ரஜினியின் பல படங்களில் அவருக்கு இணையாக வில்லத்தனம் செய்தவர் ரகுவரன்.

வில்லத்தனம் மட்டுமல்லாது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சம்சாரம் அது மின்சாரம், அஜித்தின் முகவரி, விஜய்யின் திருமலை, தனுஷூடன் யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் கலக்கியிருப்பார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் கொல்லங்கோடுதான் ரகுவரனின் பூர்வீகம். இவரின் தந்தை தனது ஹோட்டல் வியாபாரத்தை கோயம்புத்தூருக்கு மாற்றவே, குடும்பமே தமிழகத்தில் குடியேறியது.

ரகுவரன்

கோவை அரசு கலைக் கல்லூரியில் வரலாறு இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், நடிப்பின் மீது தீராத காதல் கொண்டிருந்த அவர், பாதியிலேயே படிப்பைக் கைவிட்டு நாடகக் குழுவில் இணைந்தார். சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிய சென்னை கிங்ஸ் நாடகக் குழுவில் இணைந்து நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டார். அப்போது, இவருடன் அந்தக் குழுவில் இருந்த இன்னொரு பிரபலம் நடிகர் நாசர்.

சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கவே, படிப்படியாக பிரபல நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். 1996-ல் நடிகை ரோகிணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரிஷிவரன் என்கிற மகன் இருக்கிறார். அதன்பின்னர், கடந்த 2004-ல் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் விவாகரத்து செய்தனர். நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த ரகுவரன், 2008 மார்ச் 19-ல் உயிரிழந்தார்.

இயக்குநர் ஆர்.சி.சக்தியின் கூட்டுப்புழுக்கள் படத்தில் ரகுவரன் அமலாவோடு இணைந்து நடித்தார். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள், சாதியரீதியிலான பிரச்னை, சமூக ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்டவைகளைப் பற்றி பேசிய அந்தப் படம் 1987-ல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தப் படத்தில் நடித்தபோது நடிகை அமலாவை ஒரு தலையாகக் காதலிக்கத் தொடங்கினார்.

இதையும் படிங்க: கமல்ஹாசன் படங்களில் நடிக்க மறுத்த ரகுவரன்… பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்..

ஒரு கட்டத்தில் அமலாவிடம் இதை நேரடியாகவே வெளிப்படுத்தினார். ஆனால், அமலா அதை நிராகரித்துவிட்டார். இதனால், மிகுந்த மனவேதனை அடைந்த ரகுவரன், ஒரு கட்டத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு, அந்தக் காதல் தோல்வியில் இருந்து மீண்டு, நடிகை ரோகினியை 1996-ம் திருமணம் செய்திருந்தார். அதேநேரம், தெலுங்கில் சிவா, நிர்மயம் போன்ற படங்களில் நடித்த நடிகர் நாகர்ஜூனாவை அமலா 1992-ல் காதல் திருமணம் செய்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top