நான் எப்படி டிரெஸ் போட்டா உங்களுக்கு என்னடா?... பொங்கிய அமலாபால்...
சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். சொந்த மாநிலம் கேரளா. ஆனால், தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளர்.
அறிமுகமான சிந்துசமவெளி படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகள் நடித்தவர் அமலாபால். அடுத்த படமான ‘மைனா’அவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அவரின் மார்கெட் உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் விஜயுடன் ‘தலைவா’ படத்தில் நடித்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: தனுஷ் நடிகைன்னாலே இப்படித்தானா? கண்ணாடி உடையில் கண்டதை காட்டிய “அ” நடிகை!
ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.
ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். சமீபத்தில், முழுதாக தொடை தெரியும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் சுண்டி இழுத்தது. இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்தனர். சிலர் கிண்டலடித்தனர்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அமலாபால் ‘பெண் தான் விரும்பிய படி வாழ்வாள். அவள் விரும்பிய படி உடை அணிவாள். அவளை சமூகவலைத்தளங்களில் குறிவைத்து தாக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள். அவளின் உடை பற்றி பேச இங்கே யாருக்கும் உரிமை இல்லை’ என தெரிவித்தார்.