கல்யாணம் முடிஞ்சிருச்சா!.. காதலனுடன் செம ரொமான்ஸ்!.. அமலாபாலின் திருமண புகைப்படங்கள்..
கேரளாவை சேர்ந்தவர் அமலாபால், சில மலையாள படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் மைனா படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.
விஜயுடன் தலைவா, ஆர்யாவுடன் வேட்டை, தனுஷுடன் வேலை இல்லா பட்டதாரி என பல திரைப்படங்களிலும் நடித்தார். ஒருபக்கம் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இயக்குனர் ஏல்.எல்.விஜயை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார்.
அதன்பி்ன் தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஒரு பஞ்சாபி பாடகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவியது. அந்த பாடகர் அந்த புகைப்படங்களை வெளியே பகிர்ந்ததும் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்பின், ஹிந்தி மற்றும் தெலுங்கு வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடினார். இந்நிலையில், ஜெகத் தேசாய் என்பவர் அமலாபாலுக்கு புரபோஸ் பண்ணும் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அமலாபாலும் அவருக்கு லிப்லாக் கொடுத்து அவரின் புரபோஷை ஏற்றுக்கொண்டார். அந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், கொச்சியில் உள்ள கிராண்ட் ஹையாத் நட்சத்திர ஹோட்டலில் இன்று இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து அமலாபாலின் நண்பர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.