முன்னனி நடிகர்களை பின்னுக்கு தள்ளிய அமலாபால்..! டிரெண்டெங்கில் மாஸ் செய்த சம்பவத்தை பாருங்க....
தமிழில் சமீபகாலமாக ஏகப்பட்ட தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி மக்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட முன்னனி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளிவந்து ஒரு பண்டிகை அளவுக்கு மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் தெலுங்கு படங்களும் தமிழில் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் தனி பெண்ணாக நின்று உச்சத்தில் நிற்கும் நடிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு ரீ என்ரி கொடுத்திருக்கிறார் நடிகை அமலாபால். தான் நடித்த கடாவர் படம் சில தினங்களுக்கு முன் ஓடிடியில் வெளியானது.
மரணத்தின் பின்னனியில் இருக்கும் மர்மத்தை உடைக்கும் ஒரு போலீஸ் மருத்துவராக தன் நடிப்பு திறமையை காட்டி அசத்தியிருப்பார். இந்த படம் ஓடிடியில் வெளியானதில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அமலாபாலுக்கு என்று இருந்த இமேஜை இந்த படத்தின் மூலம் மாற்றி அமைத்திருக்கிறார் நடிகை.
மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியிருக்கிறார் அமலாபால்.இந்த நிலையில் டிரெண்டிங்கில் இருக்கும் தமிழ் பட வரிசையில் அமலாபாலின் படம் கடாவர் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அண்மையில் வெளியான விருமன் படம் கூட இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அமலாபால் மிகவும் பெருமிதத்துடன் பகிர்ந்து அதிகமான அன்பை பெற்றுக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.