சிவகார்த்திகேயனின் நடிப்பில் அமரன் படம் தற்போது உலகெங்கும் சக்கை போடு போட்டு வருகிறது. அனைத்துத் தரப்பு ரசிகர்களுமே கொண்டாடத் தொடங்கி விட்டனர். நாட்டுப்பற்று கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
அதே நேரம் காஷ்மீரிகளை இதுவரை தீவிரவாதிகளாகவே சித்தரித்து வந்த போது இந்தப் படத்தில் உண்மையை அப்படியே சொல்லி இருக்கிறார்கள். அவர்களிடமும் நாட்டுப்பற்று உள்ளது. அவர்களும் இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருக்கிறார்கள்.
மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்ப்பற்றாளர் என்று தெரிகிறது. அவர் அடிக்கடி பாரதியார் பாடல்களை விரும்பிப் படிப்பாராம். எந்திரன் படத்தை எல்லோரும் இந்தியில் பார்க்க நினைத்தபோது அவர் மட்டும் தமிழில் தான் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம்.
அந்தவகையில் அவர் தமிழனாகவும், இந்தியனாகவும் மட்டுமே காட்டினால் போதும் என்று அவரது தந்தையே இயக்குனரிடம் சொல்லி இருக்கிறார். அதனால் தான் அவர் சார்ந்த சாதியைப் படத்தில் சுட்டிக்காட்டவில்லை. இதை ஒரு பெரிய சர்ச்சையாக எடுத்தபோதும் இயக்குனர் நடந்த விவரத்தை அப்படியே சொன்னதால் அது பெரிய அளவில் வெடிக்கவில்லை.
நாட்டுப்பற்றையே பிரதானமாகக் கொண்ட படத்தில் சாதிக்கு வேலையில்லை. சாதி, மதம், இனம், மொழி கடந்து தான் வேற்றுமையில் ஒற்றுமையாக அனைவரும் இந்தியர் ஒருவரே என்று நம் நாட்டில் ஆண்டாண்டு காலமாகக் கடைபிடித்து வருகிறோம்.
இந்த அடிப்படை விஷயத்தைக் கூட மறந்துவிட்டு இன்னும் சாதி சாதி சாதி என்று நம்மவர்கள் அலைவது தான் வேடிக்கையாக உள்ளது. அமரன் படம் இளையதலைமுறைக்குத் தேவையான நாட்டுப்பற்றை ரொம்பவே வளர்த்துள்ளதால் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.
உலகநாயகன் கமல் தான் அமரன் படத்தின் கமாண்டர் ஆபீசர் என்று அவரது பிறந்தநாளான நேற்று சிவகார்த்திகேயன் அவருடன் எடுத்துக் கொண்ட படத்தைப் போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது. அந்த வகையில் அமரன் 8வது நாள் கலெக்ஷன் இந்திய அளவில் 114.60 கோடியை வசூலித்துள்ளது. 8வது நாளில் மட்டும் 5.50 கோடியை வசூலித்துள்ளது.
Bahubali :…
Biggboss Tamil…
Idly Kadai: திருச்சிற்றம்பலம்…
அமரன் திரைப்படத்தின்…
துல்கர் சல்மான்…