Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்திற்கு தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக விஷயம் வெளியில் கசிந்து இருக்கிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பில் உருவான திரைப்படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.
Also Read
இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர்களோட ‘சம்பளம்’ இதுதான்!
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பு செய்திருந்தார். படம் முதலில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானாலும் முதல் நாளிலிருந்து வசூலில் சக்கை போடு போடப்படுகிறது.
படம் பார்த்த ரசிகர்களை அழுக வைத்து வசூலை குவிக்க தொடங்கி விட்டனர். 16 நாட்களைக் கடந்தோம் படம் திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல்முறையாக சிவகார்த்திகேயனின் திரைப்படம் 300 கோடியை தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இத்திரைப்படம் ஓடிடி ரிலீஸ் செய்யும் திட்டம் தள்ளி வைத்திருக்கிறது.
இந்நிலையில் படம் வெளியான ஒரு சில வாரங்களில் இருந்து ராணுவ அதிகாரிகள் சிலர் இதில் பல முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால் அதற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ராணுவ படங்கள் எடுத்தால் அதற்கு அனுமதி அளிக்கும் அமைப்பிடம் இதை காட்டி அவர்கள் ஒப்புதல் பெற்று அந்த சான்றிதழ் உடன் மட்டுமே இந்த திரைப்படம் வெளியானது. எனவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்?
இது மட்டுமில்லாமல் இப்படத்தில் முஸ்லீம் எதிர்ப்பு இருப்பதாகவும் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனால் பல திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடிவரும் திரையரங்கு ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இதற்கான சிசிடிவி காட்சிகளும் பார்ப்பவர்களை பதற வைத்திருக்கிறது. ஆனால் இதுவும் அமரன் திரைப்படத்திற்கு பிரமோஷன் ஆக மாறி படத்தின் வசூல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது.
வீடியோவைக் காண: https://x.com/MkarthikeyanBJP/status/1857664077201539347/video/1



