திரையரங்குகளில் அமரன் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் ஓடிடியில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமரன் திரைப்படத்தின் வெற்றி: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் அமரன். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் சென்டர் நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
இதையும் படிங்க: அமரன் படம் பார்க்க தனி விமானத்தில் வந்த சூர்யா – ஜோதிகா!… யாருக்காவது தெரியுமா?!..
படத்தின் எதிர்பார்ப்பு: படம் வெளியாவதற்கு முன்பு இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதை அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து இருந்தது அமரன் திரைப்படம். தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அதிலும் தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் குடும்பம் குடும்பமாக அமரன் திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்குக்கு படையெடுக்க தொடங்கினார்கள்.
படத்தைப் பார்த்த அனைவரும் இப்படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார்கள். நெகட்டிவ் விமர்சனங்களே இல்லாத ஒரு படமாக அமரன் திரைப்படம் உருவானது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் மீதான மரியாதை அதிகரித்திருந்தது. ராணுவ கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு இணையாக நடிகை சாய் பல்லவியும் தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
படத்தின் வசூல்: அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றது. முதல் மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்தது அமரன் திரைப்படம். தற்போது வரை 12 நாட்களில் 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப் பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றது. சிவகார்த்திகேயன் கெரியரிலேயே மிகப்பெரிய வசூலை கொடுத்த திரைப்படமாக அமரன் அமைந்துள்ளது.
விரைவில் இந்த திரைப்படம் 300 கோடி ரூபாயை வசூல் செய்யும் என்று பலரும் கூறி வருகிறார்கள். விஜய் படங்களான கத்தி, மெர்சல், மாஸ்டர் போன்ற படங்களின் வசூல் சாதனையை அமரன் திரைப்படம் முறியடித்து வருகின்றது. அதேபோல் அஜித் படத்தின் சாதனையையும், ரஜினிகாந்த் படத்தின் சாதனையையும் இப்படம் முறியடித்து இருக்கின்றது. இதனால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு சென்று இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
ஓடிடியில் மாற்றம் : அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை netflix நிறுவனம் முன்கூட்டியே வாங்கிவிட்டது. படம் வெளியான 4 வாரங்கள் கழித்து இந்த திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு netflix நிறுவனம் முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது வரை அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது.
இதையும் படிங்க: Kanguva: கங்குவாவில் சூர்யா அணிந்திருந்த டிரஸின் வெயிட் எவ்வளவு தெரியுமா? எப்படி தாங்குனாரு?
இதனால் netflix நிறுவனம் அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸை தள்ளி வைத்திருக்கின்றது. இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இப்படி நடந்ததே இல்லையாம். சொன்ன தேதியில் படங்களை வெளியிட்டு விடுவார்கள். ஆனால் அமரன் படத்தின் வெற்றி காரணமாக ஓடிடி ரிலீஸை netflix நிறுவனம் தள்ளி வைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.
விடாமுயற்சி திரைப்படத்திற்கு…
Maharaja: தமிழ்…
நடிகர் நாகார்ஜுனா…
Nayanthara: நடிகை…
ஆர் ஜே…