Amaran: இது நான் முகுந்துக்கு செய்யும் அஞ்சலி!. சம்பளமே வாங்காம அமரன் படத்தில் நடித்தவர் நெகிழ்ச்சி!..

Amaran
உலகநாயகன் கமல் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக். இந்தப் படத்தின் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்தவர் சிவகார்த்திகேயன். அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அசத்தல் பயோபிக்
Also read: Biggboss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் ‘மலர்ந்த’ புதிய காதல்?
அதே போல அவரது துணைவியார் இந்து ரெபேக்கா வர்க்கீஸ் ஆக சாய்பல்லவி அற்புதமாக நடித்து இருந்தார். படத்தில் இருவரும் தங்களது கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கிட்டுள்ளனர். இப்படியும்கூட நடிக்க முடியுமா என்ற அளவில் யதார்த்தமான நடிப்பை சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார்.
மாறிப்போன SK
இதுவரை இவர் இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்ததே இல்லை. அவரை இதுவரை நாம் நகைச்சுவை, நக்கல், நய்யாண்டி கலந்த ஹீரோவாகத் தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இதுல அப்படியே மாறிப்போய் இருந்தார். ஆனாலும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துவிட்டார். இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் கடின உழைப்பு தான்.
எவ்வளவு நாட்டுப்பற்று!

sivakarthikeyan eesan
இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக 3 வருடங்களாக தகவல் சேகரித்து திரைக்கதை எழுதியுள்ளார். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயனும் அற்புதமாக நடித்துள்ளார். தற்போது இந்தப்படத்தைப் பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அது இதுதான்.
அமரன் படத்தில் இன்டர்வியூ ஆபீசராக நடித்த நடிகர் ஈசன். இவர் தான் எவ்வளவு நாட்டுப்பற்று உடையவர் என்பதைத் தன் செயலிலேயே நிரூபித்து விட்டார். இதைப் பற்றி இவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா...
நடிகர் நெகிழ்ச்சி
அமரன் படத்துல நடிக்க நான் காசே வாங்கல. ஒரு கட்டத்துல நாங்க இவ்ளோ காசு கொடுத்து விடுகிறோம்னு சொன்னாங்க. இல்லைங்க நான் ஃப்ரீயா பண்ணி கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன். இது முகுந்த் அவர்களுக்கு நான் செலுத்தும் அஞ்சலி என்று சொன்னேன்.
Also read: எஸ்.கே-வுக்கு இப்படி ஒரு குடும்ப பெருமை இருக்கா!.. எங்க இருந்து வந்திருக்கார் பாருங்க!…
ரெண்டு மூணு தடவை ட்ராவலுக்கு மட்டும் அவங்க ஏற்பாடு பண்ணாங்க. கடைசி நேரத்துல சொன்னதால அதை மட்டும் நான் கேட்டேன். இல்லையென்றால் அதையும் நான் வேண்டாம் என்று சொல்லி இருப்பேன் என்கிறார் அமரன் பட நடிகர்.