கங்குவா திரைப்படம் சொதப்பிய காரணத்தால் அமரன் திரைப்படம் நிச்சயம் 300 கோடியை எட்டிவிடும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் கங்குவா. அதற்கு காரணம் படக்குழுவினர் கொடுத்த பில்டப். நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் தான் கிடைத்து வருகின்றது. கடந்த ஒரு மாதங்களாக படக்குழுவினர் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று படம் குறித்து ப்ரோமோஷன் செய்து வந்தார்கள். இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பேசிய பேச்சு கொஞ்ச நஞ்சம் கிடையாது. படம் குறித்து ஒவ்வொரு மேடையிலும் பில்டப் மேல் பில்டப் கொடுத்து படத்திற்கு ஓவர் ஹைப் கொடுத்திருந்தார்கள்.
இதையும் படிங்க: நடிகர்களுக்குப் பட்டம் தேவையா? மக்களைக் கேலிக்கூத்து ஆக்குற வேலை..! பொங்கும் பிரபலம்
ஆனால் அவர்கள் கொடுத்த ஹைப்புக்கு படம் ஒர்த்தா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. ஆனால் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது. இயக்குனர் சிறுத்தை சிவா படத்தை சொதப்பிவிட்டார் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு பிரமாதமாக இருந்தாலும் படத்தின் கதை பிரமாதமாக இல்லை என்பது பலரின் விமர்சனமாக இருக்கின்றது. இது ஒரு புறம் இருக்க தீபாவளி பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இந்த திரைப்படம் 250 கோடியை தாண்டி வசூல் செய்து வரும் நிலையில் 300 கோடியை எட்டி விடும் என்று கூறி வந்தார்கள்.
ஆனால் கங்குவா படம் வெளியாவதால் நிச்சயம் அமரன் திரைப்படம் 300 கோடியை எட்டுவது கஷ்டம் தான் என்று தெரிவித்து வந்தார்கள். தற்போது இருக்கும் சூழலில் கங்குவா திரைப்படம் சொதப்பியதால் நிச்சயம் திரையரங்குகளில் இருந்து அமரன் திரைப்படத்தை எடுத்து விட மாட்டார்கள். தொடர்ந்து திரையரங்குகளில் அமரன் திரைப்படம் ஓடுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
இதனால் நிச்சயம் இப்படம் 300 கோடியை எட்டி விடும் என்று கோலிவுட் வட்டாரங்களில் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமா ஓடிடி-யில் அமரன் படத்தை தற்போது வெளியிடக் கூடாது என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அடுத்த பிளான் இங்கதான்!… தீயா வேலை பார்க்கும் தனுஷ்?!… பின்ன கையில இவ்ளோ லிஸ்ட் இருக்கே!…
நடிகர் சூர்யாவின் கங்குவா படம் கவலைக்கிடமாக கிடக்கும் நிலையில் அமரன் திரைப்படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு இருக்கின்றது. மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் கூறி வந்த நிலையில் 200 கோடியை தாண்டினாலே அது பெரிய விஷயம் தான் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.
இப்போது சினிமா…
NEEK Movie:…
Nayanthara dhanush:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் அஜித்தின்…