More
Categories: Cinema History Cinema News latest news

கெடைச்ச வாய்ப்புல கோல் போட்டு அசத்திய வாலி… அண்ணாவிடம் இருந்து வந்த திருத்தம்..!

கவிஞர் வாலி சென்னை உஸ்மான் ரோட்டில் இருந்த ஒரு கிளப் ஹவுஸில் தான் ஆரம்பத்தில் தங்கி இருந்தார். அங்கு நாகேஷூசும் உடன் இருந்தார். நடிகர் முத்துராமன், நடிகர் ராஜா, தாராபுரம் சுந்தரராஜன் என்ற பாடகர், வெண்ணிற ஆடை மூர்த்தி, வியட்நாம் வீடு சுந்தரம்னு பலரும் பக்கத்து அறைகளில் இருந்தனர்.

இதையும் படிங்க… இந்தியன் 2 படத்துல சித்தார்த் கேரக்டரைக் கொண்டு வந்ததே இதற்குத் தானாம்… பிரபலம் தகவல்

Advertising
Advertising

அப்போது நாகேஷை சந்திக்க பாலசந்தர் சைக்கிளில் வருவாராம். அப்போது பகல் முழுவதும் பட்டினியாக இருப்பார்கள். இரவு ஒரு வேளை தான் உடன் இருந்த ஒரு நண்பரின் உதவியால் சாப்பாடு கிடைக்குமாம்.

பெரும்பாலான நேரங்களில் வாலி படுத்து தூங்கிக் கொண்டே இருப்பாராம். அப்போது ‘ஏன்டா பொழுதை வீணாக்குற. ஏதாவது எழுதுடா… பின்னால சினிமாவுக்கு உதவும்’னு நாகேஷ் சொல்வாராம். அப்படி ஒரு பாடலை எழுதினார் வாலி. ‘மச்சான் பேரு மன்னாரு, மனசுக்குள்ள நின்னாரு, பச்சைப்புள்ளையா இருக்கும்போது பரிசம் போடச் சொன்னாரு’.

இதுதான் வாலி எழுதிய பாடல். இதை தாராபுரம் சுந்தரராஜன் பாடுவாராம். அப்போது அந்த அறைக்கு வந்த சினிமா எழுத்தாளர் மா.லெட்சுமணன் என்பவர் இந்தப் பாட்டைக் கேட்கிறார். பாட்டு நல்லாருக்கே இதை நாம படத்துல பயன்படுத்தலாமேன்னு நினைச்சாராம்.

உடனே தன்னோட இயக்குனர் ப.நீலகண்டனிடம் விபரம் சொல்ல அவரும் வாலியை அழைத்து வரச் சொல்லி பாடல் எழுத வைத்தாராம். முதல் படமே எம்ஜிஆர் நடித்தது. அதற்கு அறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதுகிறார். அந்தப் படத்தைத் தயாரிப்பது அரசி பிக்சர்ஸ் நிறுவனம். அங்கு போனதும் வாலி அவர்கள் கொடுத்த கதையின் சூழலுக்கு ஏற்ப பாடல் எழுதுகிறார். படத்தில் நாயகி ராஜசுலோசனா.

இதுக்கு அப்புறம் நம் வாழ்க்கை மாறப்போகுதுன்னு ஒரு பல்லவி எழுதுகிறார். அது தான் ‘சிரிக்கின்றாள் இவள் சிரிக்கின்றாள்’ பாடல். இந்தப் பாடலை 4 பேர் ஓகே பண்ணனும். இந்தப் பாடலைத் தன் தாயாரை மனதில் வைத்தே எழுதினாராம்.

டைரக்டர், இசை அமைப்பாளர், கதாநாயகன், அறிஞர் அண்ணா. எல்லாருக்கும் பிடித்து விடுகிறது. கடைசியில் அண்ணா ஓகே சொல்லணும். கடைசியில் வாலியிடம் நாங்க கிளப் ஹவுஸ்சுக்கு வந்து அண்ணா ஓகே பண்ணிட்டாரா இல்லையான்னு சொல்றோம்னு சொன்னாங்களாம்.

அதே மாதிரி அண்ணாவின் பதிலுக்காகக் காத்திருந்தாராம் வாலி. அப்போது அண்ணா திருத்திய பேப்பரை வாலியிடம் கொடுக்க அதில் பல இடங்களில் அண்ணா சுழித்து இருந்தாராம். அதைப் பார்த்ததும் வாலி நம்ம பாட்டுல தப்பு இருக்கான்னு நினைச்சிப் பயந்தாராம். ஆனால் அது அப்படி அல்ல.

இதையும் படிங்க… கமல் ஊழலை தீவிரமாக ஒழிக்கும் காட்சி!.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் புளூசட்ட மாறன்..

அவருக்கு அதெல்லாம் ரொம்ப பிடிச்ச இடமாம். இந்த இடத்தில் உள்ள வார்த்தைகளை மாற்றவே கூடாது என்பதற்கு அடையாளமாகத் தான் அப்படி சுழி போட்டு இருந்தாராம் அண்ணா. முதல் பாடலிலேயே இடையே சரணத்தில் உதயசூரியனையும், அண்ணாவின் அடையாளமான எதையும் தாங்கும் இதயத்தையும் சமயோசிதமாகக் கொண்டு வந்துள்ளார் கவிஞர் வாலி.

Published by
sankaran v

Recent Posts