புதிய படங்களுக்கு ஆப்பு வைத்த விக்ரம் படம்...தலையில் துண்டை போடும் தயாரிப்பாளர்கள்..
முன்பெல்லாம் தியேட்டரில் மட்டுமே புதிய திரைப்படங்கள் வெளியாகி வந்தது. ஆனால், கொரோனா பரவலின் போது தியேட்டர்கள் மூடப்பட்ட போது இதுதான் சமயம் என அமேசான் பிரைம், சோனி ஹாட் ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் புதிய திரைப்படங்களை வாங்கி ரிலீஸ் செய்தது. சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படமே அமேசான் பிரைமில் பிரீமியர் செய்யப்பட்ட முதல் திரைப்படமாகும்.
இதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவே சூர்யா தனது தயாரிப்பு நிறுனத்தில் உருவான பல படங்களை அமேசான் பிரைமில் வெளியிட்டார். ஜெய்பீம் திரைப்படம் கூட அமேசான் பிரைமில்தான் வெளியானது.
அதேபோல், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்த மகான் திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியானது. ஆனால்,அப்படம் ரசிகர்களை கவரவில்லை. இப்படம் மூலம் அமேசான் பிரைமுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.
எனவே, இனிமேல் புதிய படங்களை வாங்கி ரிலீஸ் செய்ய வேண்டாம். தியேட்டரில் வெளியாகி வரவேற்பை பெற்ற படங்களை மட்டும் ரிலீஸ் செய்வோம் என்கிற முடிவுக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வந்துவிட்டதாம்.
அதேபோல், தனுஷ் நடிப்பில் உருவான மாறன் திரைப்படம் டிஷ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி மண்ணை கவ்வியது. எனவே, அனைத்து ஓடிடி நிறுவனங்களும் இந்த முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.