நெட்ஃபிளிக்ஸை பங்கமாய் கலாய்த்த அமேசான் ப்ரைம்.! இணையத்தில் கலகல…

Published on: January 10, 2022
---Advertisement---

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் நடித்துள்ள புஷ்பா-1 அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 7ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

“புஷ்பா” திரைப்படத்தின் கதையானது ஆந்திரப் பிரதேசத்தின் சீஷாசலம் மலைப் பகுதியில் விலையுயர்ந்த மரங்களை கடத்தும் கடத்தல்காரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனையான அதிரடி கதையாகும். புஷ்பா திரைப்படம் தியேட்டரில் எந்தளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதே அளவு OTTயில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது, பாக்ஸ் ஆபிஸ் பிஸின் கூறுகையில், உலகளவில் 326 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இது குறித்து பாக்ஸ் ஆபிஸ் பிஸி தனது டிவிட்டர் பக்கத்தில், “புஷ்பா 23 நாட்களில் ரூ. 176.6 கோடியும் உலகளவில் ரூ. 326.6 கோடி வசூலித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் OTT தளம் தனது டிவிட்டர் பக்கத்தில் சனிக்கிழமை இரவு என்ன திரைப்படம் பார்க்க உள்ளீர்கள் என ரசிகர்களிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அமேசான் பிரைம் வீடியோ OTT தள டிவிட்டர் பக்கத்தில் இருந்து , புஷ்பா திரைப்படம் பார்க்க உள்ளனர் என பதிவிட்டு நெட்ஃபிளிக்ஸை அதிரவைத்துள்ளனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment