Connect with us
kamal

Cinema News

அந்த மேக்கப் கிட் 2 லட்சம் இருக்கும்.. ஃப்ரீயா கொடுத்த கமல்! யாருக்கு தெரியுமா?

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தவர் நடிகர் கமல்ஹாசன். இந்த கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சேவையால் உலக நாயகன் என்ற பட்டத்தை பெற்றார். ஆனால் சமீபத்தில் தான் இந்த பட்டம் தனக்கு வேண்டாம். யாரும் என்னை உலகநாயகன் என இனி அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

அதற்கு பதிலாக கமல்ஹாசன் என்றும் KH  என்றும் அழைத்தால் போதுமானது என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து சர்ச்சைகளும் கிளம்பின. இந்த பட்டத்தை துறப்பதற்கு இத்தனை வருட காலம் அவருக்கு தேவைப்பட்டதா என்றும் விமர்சித்திருந்தனர். எப்படியோ இந்த வயதிலாவது இவருக்கு தோன்றியதே என கூறி வந்தார்கள்.

இதையும் படிங்க: Biggboss Tamil: பிக்பாஸில் இந்த வாரம் அந்த பிரபல டாஸ்க்கா? அப்போ அதிரடி சரவெடிதான்!.. மிஸ் பண்ணாதீங்கப்பா

எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும் அவர் இந்த கலைத்துறைக்கு ஆற்றிய சேவை எண்ணிலடங்காதது. சினிமாவிலிருந்து கிடைக்கும் பணத்தை சினிமாவிற்கே முதலீடாக போடுபவர் கமல். படங்களை தயாரிக்க புதுவிதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்த என தனக்கு வரும் வருமானத்தை சினிமாவிற்காகவே போட்டுக் கொண்டிருக்கிறார் கமல் .

ambady ranjith

ambady ranjith

தற்போது கூட புதிய தொழில்நுட்பமான ஏ ஐ தொழில்நுட்பத்தை படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். எந்த ஒரு தொழில்நுட்பம் மார்க்கெட்டில் புதியதாக அறிமுகமாகிறதோ அதை தமிழ் சினிமாவில் முதல் ஆளாக அறிமுகப்படுத்தும் பெருமைக்குரியவராக கமல் இருந்து வருகிறார் .இந்த நிலையில் பிரபல தேசிய விருது பெற்ற மேக்கப் கலைஞர் ஆன அம்பாடி ரஞ்சித் கமல் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: செலவுக்கு காசு இல்ல!. 2 படங்களை தட்டி தூக்கி கோடிகளை குவிக்கும் ஜெயம் ரவி!…

இவர் மலையாளத்தில் மிகப்பெரிய மேக்கப் கலைஞர். இவருக்கே தெரியாத மேக்கப் பற்றி கமலுக்கு நன்கு தெரியும் என அம்பாடி ரஞ்சத் கூறினார்.  அம்பாடி ரஞ்சித்துக்கு கமல் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேக்கப் கிட்டை இலவசமாக கொடுத்தாராம். அதை போல் நமது கண் இமையில் போடுகிற பனி மேக்கப் கமல் சொல்லித்தான் இவருக்கே தெரியுமாம். ஒருவேளை கமல் இதை முதலிலேயே தன்னிடம் சொல்லி இருந்தால் ஹெலன் திரைப்படத்திற்கு நான் தேசிய விருது பெற்றேன். அந்த படத்தில் இந்த மேக்கப்பையும் நான் பயன்படுத்தி இருப்பேன் என ஒரு பேட்டியில் அம்பாடி ரஞ்சித் கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top