இது நடந்தா அமீரும் கார்த்தியும் மீண்டும் சேருவாங்க! - பயில்வான் ரங்கநாதன் சொல்லும் வழி இதுதான்!...
சூர்யா, கார்த்தி, அமீர் இடையே கடந்த சில காலமாக மனக்கசப்பு இருந்து வருகிறது. இது ஏன்? என்ன காரணம்னு பிரபல யூடியூபரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார். பார்க்கலாமா...
சூர்யாவுக்கு நல்ல நடிக்கக் கத்துக்கொடுத்தது எல்லாம் ஜோதிகா தான். அமீர் தான் எப்படி நடிக்கணும்னு மௌனம் பேசியதே படத்தில் சொல்லிக்கொடுத்தார். அதனால சிவகுமாருக்கு அமீர் மேல ரொம்ப நம்பிக்கை வந்தது. பருத்தி வீரன் படத்துல கார்த்தியை நடிக்க வைக்க சிவகுமாரிடம் அமீர் கேட்டார்.
அவனுக்கு ஒண்ணுமே தெரியாதுடா... இங்கிலீஷ் பேசுவான்டா... தமிழே சரியா தெரியாதுன்னாருன்னு சொல்ல, என்னால முடியும். நான் நடிக்க வைக்கிறேன்னாரு அமீர். உடனே கார்த்திய நிறத்தைக் கருப்பா மாற்றணும்னு நல்ல வெயில்ல நிக்க வச்சாரு. நாலாந்திர கிராமத்து ரௌடியா ஆக்குனாரு. வீட்ல வந்த கார்த்திய பார்த்த உடனே அவங்க அப்பா அம்மா எல்லாம் அழுதுருக்காங்க. ஏன்டா நீ எப்படி இருந்தவன். இப்படி ஆயிட்டியடா...ன்னு அழுதுருக்காங்க.
இதுல கொஞ்சம் கருத்து வேறுபாடு வந்துருச்சி. அப்புறம் படம் ஹிட்டானதும் யாரும் அதைப் பத்தி பேசல. அப்புறம் கார்த்தியோட பிரஸ் மீட்ல அமீரைக் கூப்பிடல. இப்படின்னு கார்த்தி, சூர்யா இருவருக்கும் அமீருக்கும் இடையே மனக்கசப்பு வந்தது. பருத்திவீரன் படத் தயாரிப்புல பாதி படம் நல்லாருக்குன்னதும் ஞானவேல் ராஜா தலையிட்டு வாங்கினாரு.
அதனால அமீருக்கு தர வேண்டிய தொகை வரலன்னு நீதிமன்றத்துல ஒரு கேஸ் நிலுவைல இருக்கு. இதுக்கு சூர்யாவும் எந்தப் பதிலும் சொல்லலங்கற வருத்தம்.... அதுவும் நாம தான் மௌனம் பேசியதே படத்துல வளர்த்துவிட்டோம். கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லைன்னு அமீர் வருத்தப்பட்டாரு. ஆனா கார்த்தியும் இதுக்கு எந்தவிதமான விசனமும் படல.
அமீர் கார்த்தி சேர வாய்ப்பு இல்ல. ஒரு தடவை பிரண்ட்ஷிப் பிளவு பட்டுச்சுன்னா சேரறது கஷ்டம். அதே சமயம் லைகா புரொடக்ஷன், சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ் இவங்கள்லாம் நினைச்சாங்கன்னா முடியும். ஏன்னா பணம் அதிகமா இருக்கு. அங்கயும் நிறைய பணம் கொடுப்பாங்க. டைரக்டருக்கும் கொடுப்பாங்க. அப்படின்னா ரெண்டு பேரும் இணையறதுக்கு வாய்ப்பு இருக்கு.