எல்லாமே பிரியங்காதான்.. வெளியான அமீர் - பாவ்னி திருமண புகைப்படங்கள்

by Rohini |   ( Updated:2025-04-20 02:54:47  )
priyanka (1)
X

priyanka (1)

Ameer Bhavni: சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களுக்கு திருமணம் என்றாலே ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே களைகட்ட தொடங்கி விடும். அப்படித்தான் இன்று அமீர், பாவ்னி திருமணம் நடைபெற்று இருக்கிறது. கடந்த ஒரு வார காலமாகவே போட்டோஷூட், ஹல்தி நிகழ்ச்சி என கோலாவலமாக தங்களுடைய திருமண நிகழ்ச்சிகளை கொண்டாடி வந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர்களின் காதல் மலரத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள் அமீர் மற்றும் பாவ்னி.

முதலில் அமீர் தன்னுடைய காதலை தெரிவிக்க பாவ்னி அதற்கு ஆறு மாதம் நேரம் கேட்டிருந்தார். ஆறு மாதம் கழித்து பாவ்னி ஓகே சொன்னாலும் அமீர் திருமணம் செய்வதற்கு மூன்று வருடம் காத்திருந்தாராம் .அதன் பிறகு தான் இவர்களுடைய திருமணம் இன்று நடைபெற்றிருக்கிறது. குறிப்பிட்ட பிரபலங்கள் நெருங்கிய நண்பர்கள் என இவர்களுடைய திருமணம் இன்று நடைபெற்று இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே அமீர் மற்றும் பாவ்னிக்கு நெருங்கிய உறவாக இருந்தவர் விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிபி ஜோடி என்ற நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவ்னிக்கு திருமணம் செய்வது போல ஒரு நிகழ்ச்சியை நடத்தியவர் பிரியங்கா. அதைப்போல இன்று இவர்களுடைய திருமணத்தை பிரியங்கா தான் முன் நின்று நடத்தி வைத்திருக்கிறார்.

சகோதரி என்ற முறையில் இந்த ஜோடிக்கு பின்னாடி நின்று தாலியை கட்டுவதும் பிரியங்கா தான். ஏற்கனவே பாவ்னிக்கு திருமணமாகி அவருடைய முதல் கணவர் இறந்து போக அந்த சோகத்தில் இருந்த பாவ்னிக்கு புது வாழ்க்கையை காட்டியவர் அமீர். இவர்களுடைய திருமண வாழ்க்கை பல ஆண்டுகள் நீடித்து இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.

சமீபத்தில்தான் தொகுப்பாளினியான பிரியங்காவுக்கும் இரண்டாவது திருமணம் நடந்தது. டிஜேவான வசி என்பவரை பிரியங்கா திருமணம் செய்திருக்கிறார். புது மணத்தம்பதிகளாக பிரியங்காவும் வசியும் அமீர் பாவ்னி திருமணத்தில் கலந்து கொண்டு உற்சாகமாக இருந்தனர்.

Next Story