Ameer Bhavni: குழந்தையே பெத்துக்க போறதில்லையா? அமீர் பாவ்னி இப்படியொரு முடிவா?

by Rohini |   ( Updated:2025-04-15 02:40:49  )
bhavni
X

bhavni

Ameer Bhavni: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ஜோடிகள் உருவானவர்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் முக்கியமான கேள்வி. பெரும்பாலான ஜோடிகள் பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் லீலைகளை நடத்திவிட்டு வெளியில் நீ யாரோ நான் யாரோ என்று பிரிந்து போய் இருக்கின்றனர். ஆனால் எங்களுடைய காதல் புனிதமான காதல். நாங்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் ஒன்று சேருவோம் என தங்களுடைய திருமண தேதியுடன் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் அமீர் மற்றும் பாவ்னி.

வீட்டிற்குள்ளேயே இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்து தொடர்ந்து மூன்று வருடங்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர்களுடைய ஜோடியை தான் ரசிகர்களும் ரசிக்க ஆரம்பித்தனர். அதைப்போல துணிவு படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். ஏற்கனவே பாவ்னி திருமணமாகி கணவரை இழந்தவர். இதை பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே தன்னுடைய ஒட்டுமொத்த கதையையும் சொல்லி அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்தார்.

அமீரை காதலிக்க தொடங்கியதும் உடனே திருமணம் என்பது தன்னால் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்ட நகர்வுக்கு நான் செல்ல வேண்டும். அதன் பிறகு தான் திருமணம் என்ற முடிவில் இருந்த பாவ்னி இப்போதுதான் திருமண வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்கிறார். இவர்களுடைய திருமணம் வரும் 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது .

அதற்கான முன்னேற்பாடுகள் இப்போது நடந்து வருகின்றன .போட்டோ ஷூட் எல்லாம் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டார்கள் அமீர் மற்றும் பாவ்னி. அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு அனைவரும் கேட்கப்படும் கேள்வி குழந்தை எப்போது என்று தான்.

அதைப் பற்றி பாவ்னியிடம் கேட்டதற்கு அமீரை பொறுத்தவரைக்கும் குழந்தையே தேவையில்லை என்று கூறினார். அதற்கான காரணம் பாவ்னியே ஒரு குழந்தைதான் அப்புறம் எதுக்கு எனக்கு குழந்தை என எல்லா காதலரும் சொல்வதைப்போல பதிலை சொல்லி கேள்வி கேட்ட தொகுப்பாளரை உச் கொட்ட வைத்தார் அமீர்.

Next Story