அந்த படம் ஓடாதுன்னு அப்பவே தெரியும்!. தனுஷிடமே நக்கலடித்த இயக்குனர் அமீர்!...

Ameerf: இயக்குனர் பாலா இயக்கிய சேது, நந்தா ஆகிய இரண்டு படங்களிலும் வேலை செய்தவர் அமீர். மௌனம் பேசியதே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் அவர் இயக்கிய ராம் திரைப்படம் அமீர் என்ன மாதிரியான இயக்குனர் என ரசிகர்களுக்கு காட்டியது. அந்த படத்திற்கு இப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதன்பின் அவர் இயக்கிய திரைப்படம்தான் பருத்திவீரன். சிவக்குமாரின் மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தியை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார். கார்த்தியிடமிருந்து அவ்வளவு நேர்த்தியாக நடிப்பை வாங்கி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் அமீர். தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் பருத்திவீரன் எப்போதும் இருக்கும்.

இதையும் படிங்க: பிரதீப்கிட்ட இத பத்தி பேசுனேன்! ஆனா அவன் என்ன சொன்னான் தெரியுமா? மூஞ்சி பஞ்சர் ஆகியும் அடங்காத வனிதா

ஆனால், இந்த படம் தொடர்பான பிரச்சனை கடந்த 2 வாரங்களாகவே சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அமீர் மீது ஞானவேல் ராஜாவும், அவர் மீது அமீரும் மாறி மாறி புகார்களை சொல்லி வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் 17 வருடங்களாக நடந்து வருகிறது.

சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன் வண்ணன், பாரதிராஜா, கரு பழனியப்பன் என பலரும் அமீருக்கு ஆதரவாக களம் இறங்க, அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் ஞானவேல் ராஜா. சரி. விஷயத்துக்கு வருவோம். யோகி படம் மூலம் நடிகராகவும் மாறினார் அமீர். அதன்பின் வட சென்னை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இப்போதும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ரைட்டு அடுத்த பிரச்னை தொடங்கியாச்சு… லியோ பட தயாரிப்பாளர் மீது கடுப்பில் இருக்கும் லோகேஷ்… சேதி என்ன தெரியுமா?

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அமீர் ‘தனுஷ் நடித்த மாறன் படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். தனுஷே 2 முறை என்னை தொடர்பு கொண்டு பேசி இந்த படத்தில் நடிக்குமாறு கேட்டார். படத்தின் கதையை கேட்டேன். எனக்கு பிடிக்கவில்லை. அந்த படம் ஓடாது என அப்போதே எனக்கு தெரியும்’

maran

எனவே தனுஷிடம் ‘என்ன சனிப்பொணம் தனியா போகக்கூடாதுன்னு என்னையும் கூப்பிடுறீங்களா?’ என கேட்டேன். தனுஷ் சிரித்தார். தம்பிக்காக வந்து நடிங்கணே என தனுஷ் கேட்டார். எனவே, அந்த படத்தில் நடித்தேன். மற்றபடி அந்த படத்தில் நடிக்க எனக்கு எந்த ஆர்வமும் இல்லை’ என அமீர் கூறினார்.

இதையும் படிங்க: அமீர் எனக்கு எப்பையுமே அண்ணன் தான்.. அய்யா என்னை மன்னிச்சிடுங்க.. ஞானவேல்ராஜா ட்வீட்..

Related Articles
Next Story
Share it