Cinema News
ஞானவேல்ராஜாவுக்கு எதிராக திரும்பும் திரையுலகம் – சூர்யாவையே பின்னுக்குத் தள்ளிய அமீர்
Gnanavel Raja: சமீபகாலமாக அமீர் – ஞானவேல் ராஜா பிரச்சினைதான் பூதாகரமாக ஓடிக் கொண்டிருந்தது. பருத்திவீரன் படத்தின் பிரச்சினை காரணமாக மாறி மாறி அமீரும் ஞானவேல் ராஜாவும் புகார்களை சொல்லிக் கொண்டே இருந்தனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட சிவக்குமார் குடும்பம் இதை பற்றி வாயே திறக்கவில்லை. சிவக்குமார் நினைத்திருந்தால் இந்த பிரச்சினையை ஆஃப் செய்திருக்க முடியும். ஆனால் அவர் தரப்பும் சரி கார்த்தி தரப்பும் சரி எந்த மீடியாவிலும் இதைப் பற்றி பேசவே இல்லை.
இதையும் படிங்க:மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஆஸ்த்தான இயக்குனர்? அப்போ வெற்றிமாறன்
அதுதான் பலரது ஆதங்கமாகவும் இருந்தது. ஒரு கட்டத்தில் அமீரை பேசக் கூடாத வார்த்தைகளால் பேசி தாக்கினார் ஞானவேல் ராஜா. சமூகத்தில் ஒரு நல்ல இடத்தில் இருக்கும் ஒரு இயக்குனரை இந்தளவு பேசலாமா? என பிரபலங்கள் பலரும் அமீருக்கும் ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
அதில் உச்சக்கட்டமாக சமுத்திரக்கனி அறிக்கையை மாறி மாறி வெளியிட்டு தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஞானவேல்ராஜா திடீரென மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதிலிருந்தே இந்தப் பிரச்சினையின் தீவிரம் குறைய ஆரம்பித்தது.
இதையும் படிங்க: நிக்ஷனை பார்த்து சரியான கேள்வி கேட்ட கமல்! ஆடிப் போன ஹவுஸ் மேட்ஸ் – ஆண்டவரே எதிர்பார்க்கவே இல்ல
இந்த நிலையில் பிரபல சினிமா ஆய்வாளரான சுபேர் ஒரு பேட்டியில் இது பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார். அதாவது பிரச்சினை தீவிரமாக இருக்கும் போதே ஞானவேல் ராஜா அமீருக்கு எதிராக ஒரு வார்த்தையை விட்டார் என கூறினார்.
அதாவது சூர்யா இருக்கிற வரைக்கும்தான் அமீரால் பிழைக்க முடியும். அதனால்தான் இப்போது சூர்யாவுடன் நட்புறவு பாராட்டி வருகிறார் அமீர். அதன் காரணமாக கிடைத்த வாய்ப்புதான் வாடிவாசல் என்று சொன்னாராம். இது ஒரு மோசமான கருத்தாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இதுவே அமீருக்கு ப்ளஸாக மாறிவிட்டது.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் கில்லாடி இளையராஜாதான்… அவரை அடிச்சிக்க ஆளே இல்லை..!
இனி வரும் படங்களில் அமீர் கண்டிப்பாக இருப்பார் என்றும் ஏன் வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். ஆனால் அமீர் இருக்கிறார். அதனால் பல இயக்குனர்கள் ஞானவேல்ராஜாவின் அந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன் படங்களில் அமீரை பயன்படுத்த முன்வருவார்கள் என்று சுபேர் கூறினார்.