More
Categories: Cinema News latest news

உங்க கிட்ட பிச்சைக் கேட்கல!.. சூர்யா, கார்த்தி, சிவக்குமார் யாரும் வந்து பார்க்கல.. அமீர் அதிரடி!..

17 ஆண்டுகளாக அணையா பகையாக எரிந்துக் கொண்டிருக்கும் பருத்திவீரன் பிரச்சனை கடந்த ஒரு வாரமாக மிக்ஜாம் புயல் காரணமாக அமைதியான நிலையில், மீண்டும் அமீர் தனது தரப்பு நியாயத்தையும் கோரிக்கையையும் பதிலடியையும் கொடுத்துள்ளார்.

சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா அமீர் இயக்கத்தில் மெளனம் பேசியதே படத்தில் நடித்திருந்தார். அதே போல இளைய மகன் கார்த்தியையும் அமீர் இயக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என பருத்திவீரன் படத்தில் நடிக்க வைத்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஐஷு போனா என்ன?.. பூர்ணிமா தானே இருக்காரே.. மீண்டும் சேட்டையை ஆரம்பித்த காஜி நிக்சன்!..

ஆனால், அந்த படம் அமீர் தயாரிப்பில் உருவான படம் என தணிக்கைச் சான்றிதழ் ஆதாரம் வரை இருக்கும் நிலையில், அந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு எழுதி கொடுத்த விவகாரத்தை வெளிப்படையாக அமீர் கூறியுள்ளார்.

அமீர் சொல்வதெல்லாம் பொய் என தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த சிவசக்தி பாண்டியன் சமீபத்திய பேட்டியில் பேசிய நிலையில், அவரது பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த வீடியோவை அமீர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பீச் மண்ணு எங்க ஒட்டியிருக்குன்னு பாருங்க!.. புருஷன் பார்த்தா என்னாகுறது.. தீபிகாவால் தகிக்கும் இணையம்!

மேலும், பருத்திவீரன் படம் வெற்றியடைந்த பின்னர் சிவகுமார், சூர்யா, கார்த்தி எல்லாம் அமீரை சந்தித்து புதிய படம் ஒன்றை தயாரித்து லாபம் பார்க்க சொன்னதாகவும் சிவசக்தி பாண்டியன் சொன்னதில் எந்த உண்மையும் இல்லை என்றும் இதுவரை அந்த மூவரும் தன்னை சந்திக்க கூட இல்லை என்றும் வெளிப்படையாக போட்டு உடைத்து விட்டார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு நீதி கிடைக்கவில்லை என்பதால் தான் நீதிமன்றம் சென்றேன் என்றும் இப்போதும் நான் கேட்பது யாசகம் அல்ல எனக்கான உரிமையை என அமீர் நறுக்கென பேசி சூர்யா குடும்பத்தினர் தனக்கு செய்த அநீதியை தோலுரித்துக் காட்டி உள்ளார்.

 

Published by
Saranya M