சர்ச்சைக்குரிய சம்பவத்தை கையில் எடுத்திருக்கும் அமீர்… என்ன ஆகப்போகுதோ தெரியலயே!!
“ராம்”, “பருத்திவீரன்” போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்த இயக்குனராக திகழ்ந்தவர் அமீர். இவர் இயக்கிய “ஆதிபகவன்” திரைப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிவிட்டார்.
எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு அமீர், ஆர்யாவை வைத்து “சந்தனத் தேவன்” என்ற திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அத்திரைப்படம் அப்படியே நின்றுப்போனது. இதனை தொடர்ந்து தற்போது “இறைவன் மிகப் பெரியவன்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் கதையம்சத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது 1998 ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சிறைவாசிகளின் ஆயுள் தண்டனை காலம் முடிவடைந்த பிறகும் அவர்களை சிறையில் வைத்திருக்கிறார்கள் எனவும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் பல குரல்கள் எழுந்து வருகின்றன.
இதனை மையப்படுத்தியே “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் கதையம்சம் அமைந்துள்ளதாக பத்திரிக்கையாளர் சி.சக்திவேல் தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா உலகின் மீதே சமீப காலமாக பல திரைப்படங்களுக்கு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த மாதம் வெளியான “பதான்” திரைப்படத்திற்கு கூட பல சர்ச்சைகள் வெடித்தன. இந்த நிலையில் அமீரின் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தில் மிகச் சர்ச்சையான சம்பவத்தை அமீர் எப்படி கையாண்டிருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: மோகன்ஜீக்கு கிடைச்ச மரியாதை கூட கிடைக்கலையே… விஜய் ஆண்டனி படத்தை அக்கடா என தூக்கிப்போட்ட உதயநிதி…