பெண்களுக்கு மட்டும் தான் அட்ஜெஸ்ட்மெண்டா...! பிரபல இயக்குனரையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வற்புறுத்திய சம்பவம்...
தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனையை பாரதிராஜாவுக்கு அடுத்தபடியாக தன் பாணியில் கொடுக்க நினைத்தவர் இயக்குனர் அமீர். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் இப்போது கலக்கி வருகிறார்.
வடசென்னை படத்தில் இவரின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தது. மேலும் இவரின் படைப்புகளில் குறிப்பிடும் படியாக அமைந்த படம் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி ஒரு ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த படத்தின் மூலம் தான் அவரை தமிழ் சினிமா அன்னாந்து பார்த்தது. அப்படி பட்ட படைப்பை கொடுத்தவர் அமீர். இவரை சமீபத்தில் பேட்டி ஒன்றில் சந்தித்த பொழுது அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசினார். அதாவது நான் பார்த்த 100 பேரில் 20 பேரை மட்டும் தான் என்னால் தக்கவைத்துக் கொள்ளமுடிந்தது. காரணம் என்னுடன் ஒத்துப்போகாமை, என்னோட குணம் இதெல்லாம் சில பேருக்கு புடிக்காமல் போனதால் தான் அவர்கள் என்னை விட்டு போய்விட்டார்கள் என்று கூறினார்.
மேலும் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை ஒரு இரவு நேரத்தில் என்னிடம் நீ கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி போ என்று கூறினார். உடனே நான் கேட்டேன். நடிகைகளிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பத்தி பேசுனா அது வேற. என்னிடம் எதை அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றீங்கனு கேட்டேன். அதன் பிறகு தான் புரிந்தது நடிகர்களிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணி போக சொல்றாங்கனு.அவர்கள் சொல்றத கேட்க சொல்றாங்கனு. என்று கூறினார் அமீர்.