மேடையிலேயே அந்த இயக்குனரை கிழித்து தொங்கவிட்ட அமீர்.! சாதி படம் எடுத்து சாவடிக்கிறீங்க?!
அமீர் இயக்கத்தில் நீண்ட வருடத்திற்கு பிறகு ஒரு புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்திற்கு இறைவன் மிக பெரியவன் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார். அமீரின் உறவினர் தயாரிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு தங்கம் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கதை எழுதியுள்ளனர். இந்த படத்திற்கான அறிவிப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் இயக்குனர் அமீர் பேசியிருந்தார்.
அப்போதும் இப்பட தலைப்பு கதைக்களம் பற்றி மேலோட்டமாக கூறியிருந்தார். அப்போது உணர்ச்சி மிகுதியில், ' தற்போதெல்லாம் தான் சார்ந்திருக்கும் சாதி, மதம் பற்றி படம் எடுப்பது பேஷனாகிவிட்டது. நமக்குள் சாதி இல்லை.அதனை இந்த மாதிரி படம் எடுத்து மீண்டும் நமக்கு நினைவூட்டுகின்றனர். இந்த மாதிரி படம் எடுத்து ஏண்டா எங்கள சாவடிக்கிறீங்க ,
இதையும் படியுங்களேன் - நான் இயக்க வேண்டியதை அவர் தட்டி பறிச்சிட்டார்.! வெற்றிமாறன் பகீர் பேட்டி.!
அதனை பார்த்து என்னிடமும் சிலர் கேட்கின்றனர். நீங்கள் ஏன் நம்ம சமூகத்தை பற்றி படம் எடுப்பதில்லை. என என்னிடமும் சிலர் கேட்கின்றனர். நாங்கள் சாதி பார்த்து பழகியது இல்லை. நான் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவன் 5 முறை தொழுகுவேன். கரு பழனியப்பன் பெரியாரிஸ்ட், மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் நாங்கள் மூவரும் ஒன்றாக தான் எப்போதும் இருப்போம்.
நாங்கள் எங்களுக்குள் எப்படி பழகுகின்றோமோ அதனை பற்றி தான் இந்த படமும் பேசும்.' என வெளிப்படையாக பேசியிருந்தார். தான் சார்ந்த சமூகத்தை பற்றி படம் எடுப்பவர்கள் தமிழ் சினிமாவில் சிலர் இருக்கின்றனர். அவர்களை தான் அமீர் இப்படி சாடி பேசியிருக்கிறார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.