பருத்திவீரன் படத்துக்காக இவ்வளவு கஷ்டமா?!.. பாத்து பாத்து செய்த இயக்குனர் அமீர்!..

by sankaran v |
Paruthi veeran
X

Paruthi veeran

அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் தமிழ்த்திரை உலகில் மறக்க முடியாத படம். மாபெரும் வெற்றியைக் காண படக்குழுவினர் அனைவரின் உழைப்பும் அபாரமானது. அதிலும் இயக்குனர் அமீர் இந்தப் படத்திற்காக என்னென்ன மெனக்கிட்டுள்ளார் என்று கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இதுபற்றி பிரபல விமர்சகர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

கார்த்தி நகரத்தில் இருந்த பையன். ஆனால் பருத்தி வீரன் படம் வந்ததன் பிறகு 10, 15 வருஷம் வரைக்கும் கார்த்தி உண்மையிலேயே மதுரையைச் சேர்ந்தவரா என சந்தேகம் வருவது போல அவ்வளவு அழகா அவரைக் காட்டியிருப்பாரு அமீர். கார்த்தியோட நடை, உடை, பாவனையில் இருந்தும் பேசுறது வரையும் மதுரை காரரே தோற்றுப் போகும் அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார்.

PV

PV

திடீர்னு கொண்டு வந்து நிப்பாட்டுவாராம். அன்னைக்கு சூட்டிங் கிடையாது. வெயில்லயே நிப்பாட்டுவாராம். மறுநாளும் அதே மாதிரி செய்வாராம். கார்த்தி உண்மையிலேயே கோபமாதான் இருந்துருக்காரு. படத்துப் பேரு பருத்திவீரன். ஆனா பிரியாமணியை நடிக்க வச்சிருக்காங்க. பலரும் இந்தக் கேரக்டருக்கு அவரைப் போடாதீங்கன்னு சொல்லிருக்காங்க. அதெல்லாம் மறுத்து அவரை நடிக்க வச்சார் அமீர். ஆனா சும்மா சொல்லக்கூடாது. நடிப்புல பின்னி எடுத்து இருப்பார்.

இந்தப் படத்துல பிரியாமணியோட நடிப்பு கார்த்தியையும் தாண்டி இருக்கும். இந்தப் படத்துல தான் சரவணன் சித்தப்பு கேரக்டர்ல நடிச்சாரு. அதுல அவரோட நடிப்பு செம மாஸா இருந்ததால அவருக்குப் பேரே சித்தப்பு சரவணன்னு வந்துட்டுது. அமீருக்கும் அதிகமா பேரு எடுத்துக் கொடுத்ததும் இந்தப் படம் தான். இந்தப் படத்தோட கிளைமாக்ஸ் பலராலும் திட்டித் தீர்க்கப்பட்டது. இப்படி எல்லாமா கொடுமை பண்ணுவீங்கன்னு கேட்டாங்க...

ஆனா அந்த கிளைமாக்ஸ்ல தான் அந்தப் படமே ஓடுச்சுது. இந்தப் படத்துல சண்டைக்காட்சிக்காக ஒரு இடத்தைத் தேர்வு செஞ்சிருக்காங்க. அப்புறம் பார்த்தா அதை உழுது போட்டுருக்காங்க. அதனால ஒரு மாசமா அது காயற வரைக்கும் காத்துக் கிடந்து எடுத்தாங்க.

அதே மாதிரி ஒரு இடத்துல மேகம் வந்துச்சுன்னா அதே மாதிரி மறுநாள் வரும்போது தான் படத்தை எடுத்துருக்காங்க. இப்படி படத்தை செதுக்கிருக்காரு அமீர். அவ்ளோ வேலை பார்த்ததனால தான் இந்தப் படம் வெளியானதும் சக்கை போடு போட்டுருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story