சாப்ட்வேர் இன்ஜினியரிடம் 15 லட்சம் சுருட்டிய மகாலட்சுமி புருஷன்... இதெல்லாம் தேவையா பாஸ்?!...
தமிழ் சினிமாவில் திடீரென பிரபலமானவர் ரவீந்தர். சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஏதேனும் ஒரு விஷயம் சர்ச்சையாக மாறினால் உடனே அதுபற்றி பேசி வீடியோ வெளியிடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் தொடர்ந்து விமர்சனம் செய்து நெட்டிசன்களிடம் ரவீந்தர் பிரபலமானார். மேலும், சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இவரின் மீது அமெரிக்காவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் விஜய் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் சென்னை கமிஷனுருக்கு அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
ரவீந்தர் எனக்கு ஆன்லைன் மூலம் பழக்கமானார். கடந்த வருடம் மே மாதம் ஒரு நடிகருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் எனக்கூறி என்னிடம் 20 லட்சம் கேட்டார். மே 25ம் தேதியே கொடுத்து விடுகிறேன் என்றார். என்னிடம் 15 லட்சம்தான் இருக்கிறது என சொன்னேன். பரவாயில்லை என்றார். ஒரு லட்சம் சேர்த்து ரூ.16 லட்சமாக தருகிறேன் என்றார். அது தேவையில்லை என்னுடையை பணத்தை திருப்பி கொடுத்தால் போதும் என சொல்லி அடுத்த இரண்டு நாளில் அவருக்கு இரண்டு தவணையாக ரூ.15 லட்சம் அனுப்பினேன்.
ஆனால் கூறியதுபோல் அவர் பணத்தை திருப்பிதரவில்லை. ஒருவருடமாக ஒவ்வொரு காரணமாக சொல்லி இழுத்தடித்துகொண்டே வருகிறார். என்னுடைய வாட்ஸ் அப் எண்ணை பிளாக் செய்துவிட்டார். என் மனைவி மூலம் அவரிடம் பணம் கேட்டால் அவரையும் அசிங்கமாக பேசுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்குறிப்பிட்டு ரவீந்தருக்கு அவர் பணம் அனுப்பிய ஆதாரங்கள். மற்றும அவருடன் நடந்த வாட்ஸ் அப் சேட் என பல ஆதாரங்களையும் இணைத்துள்ளார்.