Cinema History
பாலா உயர உதவிய அமீர்..அவரையே தட்டிவிட்ட பாலா… எப்படி உயர்ந்தார் அமீர்…
வித்தியாச ரூட் பிடித்து படமெடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர்களில் அமீர் மற்றும் பாலா ஆகியோருக்கு இடம் உண்டு. ஆனால் இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும் சில பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதும் பலருக்கு தெரியாது.
1980களில் மதுரையில இருந்து சென்னைக்கு அமீருடன், பாலா வருகிறார். ஆனால், பாலாவினை பாலுமகேந்திராவிட உதவி இயக்குனராக சேர்த்து விட்டார். அமீர் மீண்டும் மதுரைக்கே திரும்பி விட்டார். 10 வருஷம் சினிமாவில் இருந்த பாலா ஒரு படத்தினை இயக்க ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.
விக்ரம் இயக்கத்தில் சேது படம் தான் அது. இதனை அமீருக்கு தெரிவிக்க அவரும் மகிழ்ச்சியுடன் சென்னை வருகிறார். பாலாவிடம் உதவி இயக்குனராக இணைகிறார். பல கட்ட போராட்டத்துக்கு அப்புறமா அந்த படம் ரிலீசாகுது. விக்ரம் நடிப்பில் படம் மாஸ் ஹிட் அடித்தது.
தொடர்ச்சியாக அவருக்கு அடுத்த படம் இயக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த படம் தான் நந்தா. சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் படம் உருவானது. அந்த படத்தில் பாலாவின் அசோசியேட் இயக்குனராக அமீர் பணிபுரிந்து வந்தார். ஆனால் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில காரணங்களால் அவரை வெளியேற்றி விட்டார் பாலா. அதுமட்டுமல்லாமல் வெளியான படத்தின் இண்ட்ரோவில் கூட அசோசியேட் பெயரில் அமீரின் பெயர் இடம்பெறவில்லை. இது அவரினை வெகுவாக பாதித்தது.
அந்த நேரத்தில், அவருக்கு உதவியது நந்தா பட தயாரிப்பாளர் தானாம். அமீரிடம் கதை கேட்க அவரோ தன்னிடம் இருந்த ஒரு கதையை கூறி இருக்கிறார். காதலை வெறுக்கும் ஒருத்தனோட வாழ்க்கையில வந்த காதல் அவன் வாழ்க்கையை எப்படி மாத்திச்சுங்குறதை ரொம்ப சுவாரஸ்யமாவே படமாக்கியிருந்தார் அமீர். அந்த படம் தான் மௌனன் பேசியதே என்பது குறிப்பிடத்தக்கது.