அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு!.. கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு.. அமீர் - பாவனி அலம்பல்!

by Saranya M |
amir pavni
X

பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களாக பங்கேற்ற அமீர் மற்றும் பாவனி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், வரும் ஏப்ரல் 20ம் தேதி திருமணம் செய்துக் கொள்ள போகின்றனர். திருமண தேதி நெருங்கி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவரும் விதமாக தினமும் ரொமான்ஸ் செய்யும் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அமீர் மற்றும் பாவனிக்கு அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதன் பின்னர், பெரிதாக இருவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. அமீர் ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆன நிலையில், சமீபத்தில் விமல் நடித்து வெளியான ஓம் காளி ஜெய் காளி வெப்சீரிஸில் பாவனி நடித்திருந்தார்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான அந்த ஓடிடி தொடர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. பாவனிக்கு ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்யவிருந்த பாவனி கடைசி நேரத்தில் அந்த நபரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த நடனக் கலைஞர் அமீர் பாவனியை துரத்தி துரத்தி காதலித்து வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் நடனமாடி டைட்டிலை வென்றனர்.

அதன் பின்னர், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துக் கொள்ள போகின்றனர். இந்நிலையில், இருவரும் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் “ஏடி” பாடலுக்கு ரொமான்டிக்காக நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக நேற்றும் அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”மாமா உன் பொண்ண கொடு பாட்டுக்கும் பாவனியை கட்டிப்பிடித்து நடனமாடியிருந்தார். இன்னும் ஒரு வாரத்துக்கு இவர்கள் அலம்பல் தாங்காது என ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

Next Story