Connect with us

அவ்வளவு வெறி மாப்பிளைக்கு!.. பாவனியின் சேலையை கடித்து இழுக்கும் அமீர்!.. பகீரை கிளப்பிய லேட்டஸ்ட் புகைப்படம்!

television

அவ்வளவு வெறி மாப்பிளைக்கு!.. பாவனியின் சேலையை கடித்து இழுக்கும் அமீர்!.. பகீரை கிளப்பிய லேட்டஸ்ட் புகைப்படம்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் பாவனியை துரத்தி துரத்தி காதலித்து வந்த அமீர் தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் மூலம் பாவனிக்கே ஜோடி ஆகிவிட்டார்.

சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாக நடித்து வந்த பாவனியின் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், பாவனிக்கும் இன்னொரு நபருக்கும் திருமணம் ஆகப் போவதாக அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்ற வந்த நிலையில் கடைசி நேரத்தில் அந்த திருமணத்தை மாப்பிள்ளை வீட்டார் நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனிக்கும் மனைவி மற்றும் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு வந்த ஜெமினி கணேசன் பேரன் அபிநய்க்கும் காதல் என பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் தொடர்ந்து கொளுத்திப் போட்டு வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ராஜு ஜெயமோகன் மட்டுமின்றி இதே கேள்விகளை பாவனியிடம் அமீரும் கேட்டிருந்த குறும்படத்தை எல்லாம் கமல் போட்டு விளாசித் தள்ளி இருந்தார்.

pavani reddy

வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த நடன அமைப்பாளர் அமீர் பாவனியின் பக்தனாகவே மாறி அவர் பின்னாடியே சுற்றியது, முத்தம் கொடுத்தது என பல சேட்டைகள் ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தியது.

பாவனி அமீர் தனது தம்பி மாதிரி என பிரியங்காவிடமே சொன்னது எல்லாம் மாறி தற்போது அவருடன் ஜோடி போட்டு ஆடி வருகிறார் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில், சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மாறிய ராஜு ஜெயமோகன் பாவனி மற்றும் அமீரை மேடையிலேயே பங்கமாக கலாய்த்த காட்சிகளை ட்ரோல் வீடியோக்களாக எடிட் செய்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாவனியின் சேலையை கடித்து இழுக்கும் அமீரின் புகைப்படம் ஒன்று பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.


திருமணத்துக்கு பிறகு பாவனியின் சேலையை கடித்து இழுக்கலாம், அமீர் என நெட்டிசன்கள் அவரை பங்கமாக வச்சு செய்து வருகின்றனர். பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 முடிந்த உடன் பாவனி மற்றும் அமீர் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், தற்போது இருவருமே சென்னையில் ஒன்றாக ஒரே வீட்டில் தான் உள்ளனர் என்றும் ஏகப்பட்ட தகவல்களும் கசிந்து வருகின்றன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top