ஹனிமூன் போன இடத்துல பாவனியை கட்டிப்புடிச்சு அமீர் போட்ட புகைப்படம்!.. ஒரே அலப்பறை தான்!..

பாவனி மற்றும் அமீர் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்ற நிலையில் இருவரும் நட்பாக பழகினர். பாவனியை எப்படியாவது கரெக்ட் செய்து விட வேண்டும் என நினைத்த அமீர் பிரியங்கா உதவியுடன் தொடர்ந்து முயற்சி செய்த நிலையில், பிக் பாஸ் முடிந்ததும் பாவனியை பிக்கப் செய்துவிட்டார்.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து நடனமாடி டைட்டிலை வென்ற நிலையில், அவர்களது காதல் மேலும் உறுதியானது. இருவரும் கடந்த சில வருடங்களாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடித்த கையோடு பாவனி மற்றும் அமீர் ஹனிமூனுக்கு சென்றுள்ள நிலையில், அங்கே ரெசார்ட் ஒன்று இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு முதல் முதலாக இதைப் போன்று தான் காதல் மலர்ந்ததும் கட்டி அணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம் என்றும் மூன்று ஆண்டுகள் கழித்து 2025 ஆம் ஆண்டு கணவன் மனைவியாக கட்டிப்பிடித்து போஸ் கொடுத்திருக்கிறோம் என அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அமீர் மற்றும் பாவம் இருவரும் இணைந்து அஜித் நடித்த துணிவு படத்தில் அவருடைய டீமில் இணைந்து நடித்திருந்தனர். சமீபத்தில் விமல் நடித்து வெளியான ஓம் காளி ஜெய் காளி வெப் தொடரில் பாவனி நடித்திருந்தார். அமீரும் ஒரு படத்தை இயக்கி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இஸ்லாமியரான அமீர் மற்றும் இந்து பெண்ணான பாவனி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், மதங்களைக் கடந்து மனங்களில் இணைந்து இணைபிரியாமல் இருவரும் கடைசிவரை இதே போல சந்தோஷமாக வாழ வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.