நன்றியை மறந்த அமீர்… காசுக்காக விஜே பிரியங்காவை முன் நிறுத்தி ஐசு குடும்பத்துக்கு செய்யும் துரோகம்!

by Akhilan |
நன்றியை மறந்த அமீர்… காசுக்காக விஜே பிரியங்காவை முன் நிறுத்தி ஐசு குடும்பத்துக்கு செய்யும் துரோகம்!
X

AmirPavni: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் இன்னொரு ஜோடியாக அமீர் மற்றும் பாவ்னி ரெட்டி இருவரும் இன்று திருமணம் செய்துக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு சர்ச்சை அதிகரித்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சி உள்ளிட்ட பிரபல டிவிகளில் நடித்து வந்தவர் பாவ்னி ரெட்டி. இவருடைய துரு துரு ஆக்டிங் இவருக்கு எக்கசக்க ரசிகர்களை கொண்டு வந்தது. கன்னடத்தில் நடிக்கும் போது பிரபலமாக இருந்த பிரதீப் என்பவரை காதலித்து கரம் பிடித்தார்.

இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக நடித்து வந்த சமயத்தில் ஒரு நாள் திடீரென பிரதீப் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து பாவ்னி நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு பிக் பாஸின் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

உள்ளே வந்த பாவ்னிக்கு நெருக்கமானார் விஜே பிரியங்கா. பின்னர் வைல்ட் கார்ட் மூலம் நுழைந்த அமீர் பாவ்னியுடன் நெருங்கிய பழகினார். நிகழ்ச்சியிலேயே தன்னுடைய காதலை சொல்லியும் பாவ்னி அவரை தட்டி வந்தார். ஒரு கட்டத்தில் ஜோடி நிகழ்ச்சியில் டான்ஸ் ஆட இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டது.

ஆனால் அமீர் நிகழ்ச்சியில் இருக்கும் போதே தனக்கு காசு இல்லாத போது தனக்கு சாப்பாடு போட்டு தங்க வைத்து பார்த்து கொண்டது தான் டான்ஸ் கற்றுக்கொடுத்த அலீனாவின் அம்மா ஷைஜி மற்றும் அப்பா அஷ்ரவ் தான். அவர்களால் தான் இப்போ இருப்பதாக பேசி இருந்தார்.

பாவ்னியுடனான காதலுக்கு பிறகு அவர்களிடம் இருந்து அமீர் முழுவதுமாக ஒதுங்கினார். ஐசு பிக்பாஸுக்குள் நுழைந்த போது கூட அவருக்காக சப்போர்ட் செய்யாமல் அமீர் இருந்த போதே அவர் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் பாவ்னியுடனான திருமணத்திற்கு ஷைஜி குடும்பத்தில் இருந்து யாருமே வரவில்லை.

நாத்தனார் இடத்தில் பிரியங்கா இருந்து தாலியை கட்டி இருக்கிறார். புகழுக்காக பிரியங்காவுக்கு மரியாதை கொடுத்துவிட்டு கஷ்டத்தில் உதவி செய்தவர்களை அமீர் எப்படி மறந்தார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story