சொன்னாலும் கேக்கல....! அமீரிடம் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கும் பாவனி...!

by Rohini |   ( Updated:2022-05-21 11:52:32  )
amir_mian_cine
X

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஜோடி அமீர் மற்றும் பாவனி. நடிகை பாவனி ஏற்கெனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்திரை சீரியலான ‘சின்னத்தம்பி’ மூலம் அறிமுகமானார். மேலும் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

amir1_cine

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கொஞ்ச நாளிலயே அவரது கணவர் இறந்து போக நடிப்பில் வாய்ப்புகள் வராத நிலையில் அந்த சமயம் வந்தது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. அதில் போட்டியாளராக கலந்து கொண்டு அவர் பேசும் கொஞ்சும் தமிழால் மக்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

அந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் பாவனியை காதலிப்பதாக கூறினார். ஆனால் பாவனியோ இவரை தம்பி தம்பி என்று அழைத்து அலைக்கழித்தார். இவர்களின் ஜோடியை பார்த்து மக்களும் ரசிக்கத் தொடங்கினர். ஆனாலும் அமீர் விட்டு போகிற மாதிரி தெரியவில்லை. மீண்டும் விஜய் டிவியில் பிபி3 ஜோடிகளில் போட்டியாளராக களம் இறங்கியிருக்கும் இவர்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்களா இல்லையா என்று தெரியவில்லை.

amir2_cine

இதே நிகச்சியில் அறிமுக நாளில் கூட அமீர் பிக்பாஸில் விட்டதை பிபி3 ல் விடமாட்டேன் என்று நாசுக்காக சொல்லியிருப்பார். இந்த நிலையில் நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பிரபு தேவா பாடலுக்கு ஆட உள்ளனர். பாவனி இதுவரைக்கும் சுமாரான நடனத்தையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கையில் நாளை நடக்கப் போகும் நிகழ்ச்சியில் அமீர் பாவனியை வச்சு செய்துள்ளார். மேலும் பயிற்சியின் போது கூட பாவனி மிகவும் சிரமப்படுவதாக தெரிகிறது.

இதோ அந்த வீடியோ லிங்: https://twitter.com/vijaytelevision/status/1527960064669122561?s=20&t=9T_Me7iFN1t9UyImtalchQ

Next Story