இது என்னுடைய முட்டாள்தனம்.. திருமணம் முடிந்த கையோடு அமீர் கொடுத்த பேட்டி

by Rohini |   ( Updated:2025-04-22 01:45:32  )
amir
X

amir

Amir: சமீபத்தில்தான் அமீர் மற்றும் பாவனி திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விஜய் டிவியில் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் ஏற்கனவே பிரபலமான பாவனி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அமீரும் விஜய் டிவியில் உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர். இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்கள்.

அங்கு இருந்துதான் இவர்கள் காதல் மலர்ந்து இப்போது திருமணத்தில் வந்து முடிவடைந்திருக்கிறது. இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு ஒரு யூடியூப் சேனலுக்கு அமீர் கொடுத்த பேட்டிதான் இப்போது வைரலாகி வருகின்றது. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்கிறார் அமீர். அதன் பிறகு படிப்படியாக டான்ஸ் கற்றுக் கொண்டு பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார்.

பிரபுதேவாவை சந்திக்க முடியுமா என்று நினைத்திருந்த அமீருக்கு அந்த பிரபுதேவாவுக்கே கொரியோகிராஃப் பண்ணும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் எமோஷனலுக்கு அடிமையாகி சில விஷயங்களை இழந்திருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார் அமீர். லேப்டாப் பயன்படுத்தவே தெரியாத நேரத்தில் அந்த லேப்டாப்பில்தான் எடிட்டிங்க் எல்லாம் கற்றுக் கொண்டாராம்.

அதுவும் ஒரு வாரத்தில் கற்றுக் கொண்டாராம். அந்த எடிட்டிங்கில் அடுத்த லெவலுக்கு சென்றும் அந்த லெவலை கற்றுக் கொள்ள நான்கு வருடங்கள் ஆனதாம் அமீருக்கு. அதுக்கு காரணம் எமோஷனல் பாண்டிங் இருந்ததுதான் என கூறினார். இது என்னுடைய முட்டாள்தனம் என்று கூறினார். எந்த எமோஷனலுக்கு அடிமையாக இருந்தார் என்பதை பற்றி அமீர் கூறவில்லை.

ஆனால் இன்று இந்தளவுக்கு வந்திருக்கிறேன் என்றால் அதுக்கு முக்கியமான காரணம் என்னுடைய கான்ஃபிடண்ட் தான் என அமீர் கூறினார். இல்லையெனில் என்னை விட தூரத்தில் இருந்த பாவனியை என்னால் திருமணம் செய்திருக்க முடியுமா என்றும் கூறினார்.

Next Story