ரஜினிக்காக இறங்கி வந்த அமிதாப்பச்சன்!.. கொஞ்சம் பாத்துக் கத்துக்கோங்க ஆண்டவரே!..

0
1759
amitab
amitab

Rajini 170: ரஜினியின் நடிப்பில் த.ச. ஞானவேல் இயக்கத்தில் தலைவர்170 படத்திற்கான படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியிருக்கிறது. அதற்கான படப்பிடிப்பில் கலந்து  கொள்ள ரஜினி ஆர்வமாக விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை சூழ்ந்து  கொண்ட பத்திரிக்கையாளர்கள் ரஜினி170 படத்தைப் பற்றியும் ஜெயிலரின் வெற்றியை பற்றியும் சில கேள்விகளை கேட்டனர்.

ஜெயிலர் வெற்றி  நான் எதிர்பார்த்ததையும் விட அதிகமானது என ரஜினி கூறினார். மேலும் இந்த 170 படம் ஞானவேல் இயக்கத்தில் வெளி வர இருப்பதால் நிச்சயமாக ஒரு கருத்துள்ள படமாக இருக்கும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: 500 ரூபா மட்டும் சம்பளமாக வாங்கி விஜய் நடித்த திரைப்படம்!. இப்படியெல்லாம் நடந்திருக்கா!..

அதுமட்டுமில்லாமல் மிகப் பிரம்மாண்டமாகவும் உருவாக இருக்கிறது என்று கூறினார். இது ஒரு புறம் இருக்க படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை பற்றியும் படக்குழு தனது அதிகாரப்பூர்வ தகவலை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரை மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி போன்றோர் ரஜினி170ல் இணைந்துள்ள நிலையில் அனைவரும் எதிர்பார்த்த பகத் ஃபாசிலும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். மேலும் படத்தில் அமிதாப் பச்சனும் இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஐயோ காத்தடிச்சாலே மானம் போயிடுமே!. ஏடாகூடமான உடையில் ஐஸ்வர்யா லட்சுமி…

ரஜினி170 படத்தில் அமிதாப் 20 நாள் கால்ஷீட்டில்தான் நடிக்கிறாராம். அதற்காக அவருக்கு 15 கோடிதான் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். அமிதாப்பிற்கு வெறும் 15 கோடிதானா? என்று சிலர் ஆச்சரியப்பட ஒரு வேளை ரஜினிக்காக அமிதாப் விட்டுக் கொடுத்திருப்பார் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் நம்ம ஆண்டவர் பிரபாஸின் ப்ராஜக்ட் கே படத்திற்காக 150 கோடி சம்பளம் பெறுவட்தாக தகவல்கள் வெளியாகின. அந்தப் படத்திலும் கமலுக்கு 20 நாள்கள்தான் கால்ஷீட். ஆனால் கமல் வாங்கும் சம்பளம் எங்க? அமிதாப் வாங்கும் சம்பளம் எங்க? என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: விடாமுயற்சி லுக்கில் அஜித் – திரிஷா!.. இதுதான் கதைக்காக மெனக்கெடுறதா?!.. வைரல் புகைப்படம்..

google news