ஸ்ரீதேவியின் தலையில் ரோஜாக்களை டன் கணக்கில் கொட்டிய சூப்பர் ஸ்டார்… அரண்டு போன பிரபல இயக்குனர்…
தமிழின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல இந்திய மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்தவர். அக்காலகட்டத்தில் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி.
இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா, தான் இயக்கிய ஹிந்தி திரைப்படத்தை குறித்தும் அப்போது ஸ்ரீதேவிக்கு நடந்த ஆச்சரிய சம்பவம் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
1990 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த திரைப்படம் “மேரா பதி சர்ஃப் மேரா ஹை” என்ற திரைப்படம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பக்கத்து ஸ்டூடியோவில் ஸ்ரீதேவி நடித்துக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடந்துவந்ததாம்.
ஸ்ரீதேவி நடித்துக்கொண்டிருந்த திரைப்படத்தில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டிருக்கிறது. அப்போது அங்கே அமிதாப் பச்சன் ஸ்ரீதேவியின் நடனத்தை பார்க்க வந்திருந்தாராம். வந்தவர் ஸ்ரீதேவியின் நடனத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பி போய்விட்டாராம்.
அமிதாப் பச்சன் எதுவும் சொல்லாமல் இப்படி போய்விட்டாரே என படக்குழுவினர் சோகத்தில் இருந்தார்களாம். இதனை தொடர்ந்து சில மணி நேரத்தில் ஒரு பெரிய டிரக் ஒன்று வந்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஸ்ரீதேவியை அமிதாப் பச்சனின் மேனேஜர் ஒருவர் வெளியே அழைத்து வந்தாராம்.
அந்த டிரக்கில் டன் கணக்கில் காஷ்மீர் ரோக்கள் இருந்திருக்கிறது. அந்த ரோஜாக்கள் அனைத்தையும் அப்படியே ஸ்ரீதேவியின் தலையில் கொட்டினார்களாம். தனது கழுத்து வரை ரோஜாப் பூக்களால் புதைந்துபோய் உள்ளார் ஸ்ரீதேவி. இதனை பார்த்த மனோபாலா அரண்டுபோனாராம்.
இதையும் படிங்க: “ஒரு பெண் இப்படி அத்துமீறலாமா?”… பாக்யராஜ்ஜை கேள்விகளால் துளைத்தெடுத்த ஜெயலலிதா… சப்போர்ட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்!!
அப்போது அமிதாப் பச்சனின் மேனேஜர் ஸ்ரீதேவியிடம் லெட்டர் ஒன்றை கொடுத்தாராம். அதில் “Wonderful” என்று எழுதப்பட்டு அமிதாப் பச்சனின் கையெழுத்தும் இருந்திருக்கிறது. பாலிவுட்டில் சாதாரணமாக பாராட்டுவதை கூட மிகவும் ராயலாக செய்கிறார்களே என வியந்துபோனாராம் மனோபாலா.