More
Categories: Cinema News latest news

நீங்க தான் தலைவர்!.. தன்னடக்கத்தில் அமிதாப் பச்சனை யாரும் அடிச்சிக்க முடியாது.. ரஜினிக்கு பாராட்டு!..

என்னுடைய குருநாதர், என்னோட இன்ஸ்பிரேஷன் நடிகர் அமிதாப் பச்சன் ஐயாவுடன் மீண்டும் 33 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிப்பதில் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறேன் என இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 170வது படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கப் போகும் அறிவிப்பை போட்டோவுடன் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தற்போது அந்த ட்வீட்டை பார்த்த அமிதாப் பச்சன் படத்தின் டைட்டிலே தலைவர் 170 தான். தலைவர் என்றால் லீடர், சீஃப், ஹெட் நீங்க தான் தலைவர் இந்த படத்துக்கு என்றும் உங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பகல் கொள்ளையா இருக்கே!.. லியோ படத்தால் தியேட்டர்களுக்கு நஷ்டம்!.. திருப்பூர் சுப்பிரமணியம் பகீர்!..

உங்களுடன் ஒரு போதும் என்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் என டவுன் டு எர்த்தாக அமிதாப் பச்சன் தன்னடக்கத்துடன் பேசியதை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த அளவுக்கு தன்னடக்கம் மற்றும் பெரியவர்களை மதித்து நடப்பது இப்போதுள்ள இளம் தலைமுறையினர் நடிகர்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராது என கலாய்த்து வருகின்றனர்.

அமிதாப் பச்சனின் பல படங்களை ரீமேக் செய்து தான் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக மாறினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனை ரஜினிகாந்தும் பல மேடைகளில் வெளிப்படையாகவே சொல்லி உள்ளார்.

இதையும் படிங்க: ‘ஜெயிலர்’ வெற்றியால் துள்ளும் ரஜினி! கண்ட்ரோல் முழுக்க அவர்தான் – ரஜினி170ல் மாட்டிக்கிட்டு முழிக்கும் ஞானவேல்

இன்றும் தனது குருநாதர் என்றே அமிதாப் பச்சனை அவர் அடையாளப்படுத்தும் அந்த குணமும் அதற்கு நிகராக அவரை போற்றி பாராட்டும் அமிதாப் பச்சனின் குணமும் ரசிகர்களை புல்லரிக்க செய்துள்ளது.

 

Published by
Saranya M

Recent Posts