சிவாஜி காலில் விழுந்த அமிதாப்பச்சன்..பதறிய தயாரிப்பாளர்...லீக் ஆன சம்பவம்....

by Rohini |
siva_main_cine
X

ஹிந்தியில் வெளியான ‘அவதார்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் வாங்கி ‘வாழ்க்கை’ என்று தமிழில் தயாரித்தார். அந்த படத்தில் எல்லாரின் எதிர்ப்பையும் மீறி சிவாஜிக்கு ஜோடியாக அம்பிகாவை கமிட் செய்தார் சித்ரா லட்சுமணன்.

sivaji1_cine

மேலும் நடிகை ராதாவையும் படத்தில் நடிக்க வைத்தார். படத்தின் துவக்க விழாவை கோலாகலமாக துவக்க விரும்பிய சித்ராலட்சுமணன் அமிதாப்பச்சன், ஜித்தேந்திரா, கமல் ஆகியோரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். இந்த விஷயத்தை பிறகு தான் சிவாஜிக்கு தெரியப்படுத்தினார் சித்ரா.

இதையும் படிஙக : “பொன்னியின் செல்வன் எனக்கு திருப்தியாக இல்லை”… மணி ரத்னத்திடமே தைரியமாக போட்டு உடைத்த ஜெயம் ரவி…

siva2_cine

கேள்விப்பட்ட சிவாஜி இதெல்லாம் வேண்டாம், இந்த மாதிரி விழாவை பிரபுவுக்கு வேண்டுமென்றால் செய்து கொள்ளுங்கள், எனக்கு வேண்டாம் என மறுத்திருக்கிறார் சிவாஜி. அந்த மூன்று பேருக்கு சொல்லியதால் என்னசெய்வதென்று திகைத்த சித்ரா ஜித்தேந்திராவை சமாளிப்பது எளிது என புரிந்து கொண்டார். ஏனெனில் விழா காலை 9 மணி என சொன்னதும் 9 மணியா? என திகைத்த ஜிந்தேந்திராவிடம் சிவாஜி விழாவை 7 மணிக்கு மாற்றிவிட்டார் என பொய்சொல்லியிருக்கிறார் சித்ரா.

siva3_cine

இதை கேட்டதும் ஜிந்தேந்திரா 7 மணிக்கா? என்னால் வரமுடியாது என சொல்ல ஒரு வழியாக ஒருத்தரை சமாளித்து விட்டோம் என பெருமூச்சு விட அமிதாப்பிடம் எந்த பாட்ஷாவும் பலிக்காது. ஏனெனில் விழா 6 மணியானாலும் 5.54 மணிக்கு வந்து நிற்க கூடியவர் அமிதாப்.அதனால் நடக்கிறது நடக்கட்டும் என விழா ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார் சித்ரா. சரியாக விழாவிற்கு சிவாஜி வர ஏற்கெனவே வந்திருந்த அமிதாப், சிவாஜியின் காலில் நெடுஞ்சான் கிடையாய் விழுந்து விட்டாராம். உடனே சிவாஜி அமிதாப்பை ஏற தழுவி கட்டி அணைத்து விட்டாராம். இதை பார்த்துக் கொண்டிருந்த சித்ராவுக்கு அப்பொழுது தான் நிம்மதி வந்திருக்கிறது. ஏனெனில் இந்த சம்பவத்தால் சிவாஜி வேண்டாம் என சொன்னதையே மறந்தே விட்டார்.

Next Story