ரொம்ப மோசம்.. பாத்ரூம் கூட இல்லை!.. அந்த இடத்துல இன்ஃபெக்‌ஷன் வந்துடுச்சு.. அம்மு அபிராமி கதறல்!..

by Saranya M |
ரொம்ப மோசம்.. பாத்ரூம் கூட இல்லை!.. அந்த இடத்துல இன்ஃபெக்‌ஷன் வந்துடுச்சு.. அம்மு அபிராமி கதறல்!..
X

கண்ணகி படத்தில் நடித்துள்ள அம்மு அபிராமி அளித்துள்ள பேட்டியில் கம்மி பட்ஜெட்டில் படம் எடுக்கிறோம் என டார்ச்சர் செய்யும் தயாரிப்பாளர்களையும் அவர்களுக்கு துணை போகும் இயக்குநர்களையும் வச்சு விளாசி உள்ளார்.

நடிகைகளுக்கு ஒரு பாத்ரூம் கூட அரேஞ்ச் பண்ண முடியாத நீயெல்லாம் ஏன் படம் எடுக்குற என்றே கேட்டு வெளுத்து விட்டார்.

இதையும் படிங்க: இந்த கதை சரியா?!. இயக்குனரிடம் மல்லுக்கட்டிய ரஜினி!.. ஆனா கிடைச்சது சிறந்த நடிகர் விருது!..

ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி பல படங்களில் இதுபோன்ற சூழல்களை சந்தித்து இருப்பதாகவும், அதனால் தனக்கு இன்ஃபெக்‌ஷன் எல்லாம் வந்திருக்கிறது, ரொம்பவே அவதிப்பட்டுள்ளேன் என்றும் தனது வேதனையை கொட்டித் தீர்த்துள்ளார்.

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், மறைந்த நடிகர் மயில்சாமி, மெளனிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கண்ணகி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், அதற்காக பேட்டியளித்த நடிகை அம்மு அபிராமி பேசும் போது, பெண்களுக்கு உடை மாற்றுவதற்கு ஒரு இடம் இருக்காது என்றும் பாத்ரூம் போக கூட வெளி இடங்களில் வசதி செய்யாமல் அப்படி என்ன இதுக்கு ஷூட்டிங் நடத்தி சம்பாதிக்க நினைக்கிறாங்கனே தெரியல என்றும் எதையாவது வெளிப்படையாக சொன்னால் இவ ரொம்ப திமிரு புடிச்சவ என முத்திரை குத்தி ஒதுக்கி வச்சிடுவாங்க என இளம் நடிகை குமுறியுள்ளார்.

இதையும் படிங்க: எவ்ளோ நாளாச்சி உன்ன இப்படி பாத்து!.. அங்கங்க கிழிச்சி அசிங்கமா காட்டும் ஆண்ட்ரியா!..

படப்பிடிப்பு தளங்களில் நடிகர் நடிகைகளுக்கு பாத்ரூம் வசதி கூட இருக்கிறதா? இல்லையா? என்பதை கூட நடிகர் சங்கம் பார்ப்பது கிடையாதா? என இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விளாசி வருகின்றனர்.

Next Story