தனது கனவு காரை வாங்கிய தனுஷ் பட நடிகை.... குவியும் வாழ்த்துக்கள்....

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே அதுவும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் அம்மு அபிராமி. இவர் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. அம்மு அபிராமி நல்ல நடிகையாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை தொடர்ந்து மூன்று படங்களில் அவரது கதாபாத்திரத்தை கொலை செய்து விடுவார்கள். அந்த வகையில் ராட்சசன், அசுரன், துப்பாக்கி முணை உள்ளிட்ட படங்களில் அபிராமியை கொலை செய்வது போல் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
இதுகுறித்து ஒரு சமயத்தில் ரசிகர்களே பாவம்டா அந்த பொண்ணு ஏன்டா இப்படி பண்றீங்க என மீம்கள் போட்டு கலாய்த்து வந்தனர். சரி இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம். அபிராமி அசுரன் படத்தில் தனுஷின் முறை பெண்ணாக நடித்து அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

ammu abirami
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அபிராமிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வரும் அபிராமி அவரது கனவு கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். இதை புகைப்படத்துடன் அவரே வெளியிட்டுள்ளார்.
அதன்படி அபிராமியின் கனவு வாகனமான மகிந்தரா கம்பெனியின் தயாரிப்பான தார் என்கிற புதிய வாகனத்தை சமீபத்தில் அம்மு அபிராமி வாங்கியுள்ளார். புதியதாக வாங்கிய காருடன் எடுத்த புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள அபிராமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.