More
Categories: Cinema News latest news

என்னதான் லேடி சூப்பர்ஸ்டாரா இருந்தாலும் அந்த விஷயத்துல கோட்ட விட்ட நயன்! கெத்து காட்டிய நடிகை

Actress Nayanthara: தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை இந்த சினிமா துறையில் பிடித்தார்.

அவர் நடித்த இரண்டாவது படமே ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்தது தான். அதிலிருந்து அவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது. தொடர்ந்து அஜித் விஜய் சூர்யா போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தது மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி என அடுத்தடுத்து தனது சினிமாவின் பரிணாமத்தை உயர்த்திக் கொண்டே போனார் .

இதையும் படிங்க:சூர்யா இனி அந்த விஷயத்துல யோசித்து முடிவு எடுக்கறதுதான் நல்லது… எவ்ளோ டிராப்னு பாருங்க..!

தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கும் நயன் ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நடித்து அந்தப் படமும் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது .லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன் நடிகர்களுடன் டூயட் பாடுவது மட்டுமல்லாமல் பெண்களை மையப்படுத்தி அமையும் கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலமும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றார்.

குறிப்பாக அறம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்திரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர்  ‘அந்த காலத்தில் நடிகை சுஜாதா தனி கதாநாயகியாக நடித்த பல படங்களை வெற்றி படங்களாக கொடுத்தார் .

இதையும் படிங்க: அஜித் வீசிய அடுத்த வெடிகுண்டு!… விடாமுயற்சியில் சிக்கி தவிக்கும் மகிழ் திருமேனி!.

அதே மாதிரியான படங்களை நயன்தாரா கொடுத்திருக்கிறாரா ’என்ற கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சித்திரா லட்சுமணன் நயன்தாரா தனி கதா நாயகியாக நடித்து பல படங்களை கொடுத்திருந்தாலும் சுஜாதா அளவுக்கு அந்த அளவு வெற்றி படங்களை நயன் கொடுக்கவில்லை .ஆனால் சுஜாதா தனி கதாநாயகியாக நடித்து ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் என்று கூறினார்.

sujatha

நடிகை சுஜாதாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பெற்ற நடிகை. எந்த மாதிரியான உணர்வுகளையும் சிங்கிள் டேக்கில் நடித்துக் கொடுப்பதில் வல்லவர்.

Published by
Rohini

Recent Posts