2021ல் சிறந்த ஹாலிவுட் படங்கள் - ஓர் பார்வை

by sankaran v |   ( Updated:2021-12-30 02:51:41  )
2021ல் சிறந்த ஹாலிவுட் படங்கள் - ஓர் பார்வை
X

Daniel crieg as James bond 007

ஹாலிவுட் படங்கள் என்றாலே நமக்கு பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவல் பிறந்து விடும். பாஷை புரிகிறதோ இல்லையோ அந்தப்படத்தில் வரும் பிரம்மாண்டமான காட்சிகளையும் சாகசங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் மேலோங்கும்.

என்ன தான் தமிழ்ப்படங்களில் பிரம்மாண்டங்களும் சாகசங்களும் நிறைந்து இருந்தாலும் அவை ஹாலிவுட் படங்களுக்கு ஈடாகாது. அந்த வகையில் 2021ன் சிறந்த ஹாலிவுட் படங்களின் பட்டியலைப் பற்றிப் பார்ப்போம்.

ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்

No way home

டாம் ஹாலன்டு, பெனடிக்ட் சம்பர்பேட்ச், ஷென்டயா, மாரிசா டோமி, ஜான் ஃபேவரியு, ஆல்ப்ரட் மோலினா, ஜாமி ஃபாக்ஸ், வில்லியம் டாஃபோயி ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே ஸ்பைடர் மேன் வரிசையில் படங்கள் வந்துள்ளன. சிலந்திமனிதனின் சாகசங்கள் தான் ஸ்பைடர்மேன்.

எவ்வளவு உயரமான கட்டடங்களிலும் கையில் இருந்து ஒரு பசையை நீட்டி சுவரில் ஒட்டியபடி சிலந்தி போல் சரசரவென செல்வதுதான் ஸ்பைடர்மேன். எதிரிகளை வேட்டையாடுவதும், சாகசங்கள் செய்வதையும் அகன்ற வெண்திரையில் பார்க்கும்போது நமக்குள் ஒரு குதூகலமான உணர்வு ஏற்படும்.

சிறுவர்களுக்கு பிடித்தமான படம். மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து கொண்டாட வேண்டிய படம் இது.

நோ டைம் டு டை

ஜேம்ஸ்பாண்ட் 007 நடித்துள்ள பல படங்கள் ஹாலிவுட்டில் ஹிட்டாகி பெரும் வசூலை ஈட்டியுள்ளன.

வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நடிகர்கள் ஜேம்ஸ்பாண்ட் 007 ஆக நடித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு வந்துள்ள படம் நோ டைம் டு டை. அதாவது சாவதற்குக் கூட நேரமில்லையாம்.

இதுதான் தமிழில் அர்த்தம். அந்த அளவு 007 செம பிசியாக இருக்கிறார். படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ்பாண்ட் 007 ஆக நடித்துள்ளார். அவரது படங்களில் கதாநாயகிகளும் சாகசம் செய்வார்கள். கிரிஸ்டோப் வால்ட்ஷ், ராமி மாலேக், அனா டி ஆர்மாஸ், டேவிட் டென்சிக், பில்லி மகுனுசன், ஜெஃப்ரி ரைட், ரால்ப் ஃபியன்னஸ், லியா செடோக்ஸ், நயோமி ஹாரிஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

வழக்கம்போல இந்த படத்திலும்; ஜேம்ஸ்பாண்டின் துப்பறியும் சாகசங்களை வியந்து பார்த்து ரசிக்கலாம். இந்தப்படத்தை வெண்திரையில் பார்க்கத் தவறாதீர்.

ஷாங் - சி அண்டு த லெஜன்ட் ஆப் தி டென் ரிங்ஸ்

shang chi

ஆவ்க்வாஃபினா, மிச்செல்லி யேஹோ, சியு வை லியுங் உள்பட பலர் நடித்துள்ள படம் ஷாங்-சி அண்டு தி லெஜண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்.

இந்தப்படத்தில் ஷாங் சி ஒரு அழகான அமைதியான ஆன்மிக உணர்வை ஏற்படுத்துகிறார். படத்தில் ஒருவிதமான மாயாசக்தியை கதாநாயகி அழிக்கிறார்;. உலகையே அழிக்கும் விதத்தில் இந்த சக்தியானது கொடூரமான கருப்பு விலங்கு உருவில் உள்ளது.

மார்வெல் என் படக்கதையை மையமாகக் கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் சிறந்த ஹாலிவுட் படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

டுனே

திமோத்தீ சாலமெட், ஆஸ்கர் ஐசக், ஷெண்டயா, ரெபெக்கா பெர்குசன், ஜோஷ் ப்ரோலின், டேவ் பியடிஸ்டா, ஜேசன் மோமாவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சிறந்த பொழுதுபோக்கு படங்களின் வரிசையில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. அதீத கற்பனைத்திறனுக்கு இந்தப்படம் ஒரு எடுத்துக்காட்டு. அதாவது 10191ம் ஆண்டு நடக்க உள்ள ஒரு சம்பவத்தை இந்த 2021லேயே எடுத்துள்ளனர். அப்படி என்றால் படம் எப்படி இருக்குமோ அதை எப்படியாவது பார்த்து விட வேண்டுமே என்ற எண்ணம் கண்டிப்பாக வரத்தான் செய்யும்.

அந்த 10191ம் ஆண்டில் விண்வெளியில் வெகு தொலைவில் பூமியைப் போல வசிக்கக்கூடிய ஒரு கோள் உள்ளது. அங்கு ஒரு மக்கள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் படும்பாட்டையும் தங்களை இந்தக்கொடுமையில் இருந்து காப்பாற்ற ஒருவர் கண்டிப்பாக வருவார் என்ற ஒரு உறுதியான நம்பிக்கையுடனும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப்புதுவித உணர்வைப் பெற வேண்டுமானால் கட்டாயமாக இந்தப்படத்தைப் பாருங்கள்.

தி ஃபாதர்

புளோரியன் செல்லர் இயக்கிய இந்த படம் மறதிநோய் சம்பந்தப்பட்டது. இந்தப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஹாப்கின்ஸ் சின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். படத்தில் ஒலிவியா கோல்மன், மார்காடிஸ், இமோகென் பூட்ஸ், ரூபஸ் செவல், ஒலிவியா வில்லியம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தை பிரெஞ்ச் மற்றும் பிரித்தானியா இணைந்து தயாரித்துள்ளது. கடந்த ஆண்டின் சிறந்த ஹாலிவுட் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Next Story