தியேட்டரில் அலப்பறை கொடுத்த விஜய்… அதுவும் இவர் படத்துக்கா? வைரலாகும் புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

by Akhilan |   ( Updated:2023-09-02 05:40:40  )
தியேட்டரில் அலப்பறை கொடுத்த விஜய்… அதுவும் இவர் படத்துக்கா? வைரலாகும் புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
X

நடிகர் விஜய் பற்றி கேட்டாலே அவர் ரொம்பவே அமைதியான ஆள். அலப்பறையாக கூட பேசத்தெரியாதவர். ஆனால் அவர் தியேட்டரில் அலப்பறை கூட்டினார் என்றால் நம்ப முடிகிறதா? அதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் செம வைரலாக பரவி வருகிறது.

லியோ படத்தின் வேலைகளை முடித்து கொண்ட விஜய் தற்போது தளபதி68 படத்தின் மீது ஆர்வம் காட்ட தொடங்கி விட்டார். அதன் முதற்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்காக படக்குழு லண்டன் சென்று தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பக்கம் திரும்பி இருக்கின்றனர்.

இதையும் படிங்க : அந்த இடத்தை பார்த்தா தலையே சுத்துது.. மறைக்காம மாட்டி மனச கெடுக்கும் யாஷிகா….

இப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் அர்ச்சனா தயாரிக்கிறார். யுவனுடன் இணைந்து தமனும் இந்த படத்தில் இசையமைக்க இருக்கிறார். மாஸ் பீஜிஎம்களை தமனிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் படக்குழு தரப்பில் இருந்து தெரிவித்து இருக்கின்றனர்.

இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதும், ஒரு வேடம் ரா ஏஜெண்ட் என்றும் பல தகவல்கள் இணையத்தில் ரிலீஸ் ஆகி வைரலானது. ஜோடியாக ஜோதிகா, பிரியங்கா மோகன் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஜோதிகா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் அவருக்கு பதில் சிம்ரன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வாலியை சீண்டினால் இதுதான் நடக்கும்! பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேசிய ஷங்கர்

அப்படி என்னப்படத்தினை தான் பார்த்தார் எனக் கேட்க தோணுமே? டென்சல் வாசிங்டன் நடிப்பில் வெளியான இக்குவலைசர் படத்தின் முதல் நாள் காட்சியில் தான் இந்த அலப்பறை நடந்து இருக்கிறது. இது ரொம்பவே புதிதான விஜய். கண்டிப்பாக விஜய் அனுமதியுடன் தான் வெங்கட் பிரபு இப்படத்தினை பகிர்ந்து இருக்க முடியும். பிரஸ்ஷான விஜயை பார்க்கவே புதிதாக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

Next Story