அப்பாவியான நடிப்பு... ஆனா மிரள வைத்த கமல் பட டைரக்டர்... கடைசி காலகட்டத்தில் இவ்ளோ சோகமா?
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் பிரதாப் போத்தன். 1985ல் தேசிய விருது பெற்ற ஒரு படத்தை இயக்கியுள்ளார். கமல், பிரபு நடித்த வெற்றி விழா படத்தை இயக்கியவர் இவர் தான். இவரைப் பற்றி அறியாத சில தகவல்களைப் பார்ப்போமா...
கேரளாவைச் சேர்ந்த பிரதாப் போத்தன் சிறுவயதிலேயே நடிக்க ஆர்வம் காட்டினார். வாய்ப்பு தேடி சென்னை வந்தார். மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் 1979ல் பாலசந்தரின் அழியாத கோலங்கள் படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து இளமை கோலம், மூடு பனி ஆகிய படங்களில நடித்தார். இவற்றில் ரசிகர்கள் மத்தயில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் மூடுபனி. பாலுமகேந்திரா இயக்கினார். ஷோபா தான் ஹீரோயின். படத்தில் இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே அற்புதம்.
தொடர்;ந்து இவருக்கு சூப்பர்ஹிட் படங்களாக வந்தன. வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள் என வந்த படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
1985ல் நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. ஒரே வருடத்தில் டைவர்ஸ் ஆனது. 1985ல் ராதிகா தயாரிக்க மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தை இயக்கினார். இது சக்கை போடு போட்டது. அந்த ஆண்டிற்கான தேசிய விருதையும் பெற்றது.
இதையும் படிங்க... அவர் வேற மாதிரி.. சான்சே இல்ல!.. விஜயகாந்திடம் இதைத்தான் கற்றுகொண்டேன்!. உருகும் சுகன்யா..
தொடர்ந்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தினார். அப்படித்தான் ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் ஆகிய படங்கள் இவரது இயக்கத்தில் வெளியானது.
ஆனால் இவரது கடைசி காலகட்டம் நெஞ்சைப் பிழியும் சோகம் நிறைந்தது. 15.7.2022 அன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் யாரும் அறியாத வகையில் உடல் நல கோளாறால் இறந்து கிடந்தாராம். பெரிய கண்ணாடி போட்டு முட்டை கண்களுடன் இவரது அப்பாவியான நடிப்பும், பேசும் வசனமும் இன்றும் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும்.