பிரதீப் ரெட் கார்டு அறிந்து கவின் போட்ட பதிவு - நெகிழ வைக்கும் புகைப்படம்!
Kavin about Pradeep: விஜய் டிவியில் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் சீசன் 7. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமாக இந்த சீசன் அமைந்தது. பிக்பாஸ் இரண்டு வீடாக பிரிந்ததில் இருந்து டாஸ்க் விளையாட்டிலும் புதுமைகள் இருந்தன.
ஆனால் போட்டியாளர்கள் குரூப் குரூப்பாக ஆடாமல் கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஒவ்வொருத்தரையும் காலி செய்து வருகிறார்கள். அதன் மூலம் நாம் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி அமைந்த நிகழ்ச்சியாகத்தான் நேற்றைய எபிசோடு அமைந்தது.
இதையும் படிங்க: இழவு வீட்டுல என்ன ரொமான்ஸ்!.. தல தளபதி சலூனையே ஓவர்டேக் செய்த சந்தானம்.. பில்டப் டீசர் எப்படி இருக்கு?
மொத்தமாக சேர்ந்து எப்படியாவது பிரதீப்பை வீட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என ப்ளான் பண்ணிக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஒரு கட்டத்தில் விஷ்ணுவே உன்னை எப்படி இந்த வீட்டை விட்டு வெளியேற்றலாம் என்றுதான் யோசிச்சுக்கிட்டு இருக்கோம் என கூறியிருப்பார்.
அதே மாதிரி நேற்று பெண் போட்டியாளர்கள் சிலர் பிரதீப்பிற்கு எதிராக செங்கொடியை தூக்கினார்கள். அதுமட்டுமில்லாமல் அவர் இந்த வீட்டில் இருப்பதற்கே தகுதி இல்லாதவர் என முத்திரை குத்தி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்கள்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு ஜப்பான் வருது!.. அடுத்து கார்த்தியை வம்பிழுப்போம்.. பக்காவா ரூட்டு போட்ட ப்ளூ சட்டை மாறன்!
இது நடந்த சில வினாடிகளிலேயே பிரதீப்பிற்கு ஆதரவாக உரிமைக்குரல் எழுந்துள்ளது. சமூகவலைதளத்தில் பிரதீப்பிற்கு ஆதரவாக ஹேஸ் டேக்கை ஆரம்பித்து கமலை வச்சு செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிரதீப் வெளியே வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்த மாயா, பூர்ணிமா, ஜோவிகாவையும் கிழித்து வருகின்றனர்.
மேலும் பிரதீப் செய்தது தப்பாகவே இருந்தாலும் ஒரு எச்சரிகை செய்திருக்கலாம். அல்லது மஞ்சள் கார்டு கொடுத்திருக்கலாம். ஆனால் இப்படி ரெட் கார்டை கொடுத்து ஒரு மனிதனின் எதிர்காலத்தையே காலி பண்ணிவிட்டீர்களே கமல் சார் என பல தரப்பில் இருந்தும் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: கம்பேக் கொடுக்கப் போறாரா கார்த்திக் சுப்புராஜ்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரெய்லர் தரமா இருக்கே!..
இந்த நிலையில் பிரபல நடிகரான கவின் பிரதீப்பிற்கு நெருங்கிய நண்பர். கவின் பிக்பாஸில் இருக்கும் போது வீட்டிற்குள் வந்து கவினை கன்னத்தில் அறைந்து அப்பவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இன்று அவரை வெளியனுப்பியதற்கு கவின் தன்னுடைய இணையதள பக்கத்தில் ‘உன்னை அறிந்தவர்கள் எப்போதும் உன்னை பற்றி அறிவார்’ என பதிவிட்டு பிரதீப்புடன் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டிருக்கிறார்.