1000 படங்கள்! 50 வருட ரகசியம்.. குமரிமுத்துவின் டைரியை பார்த்து ஷாக் ஆன ஒட்டுமொத்த குடும்பம்

Actor Kumarimuthu: தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் இவர்கள் நகைச்சுவையில் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வந்தார்களோ அதே போல் அவர்களுக்கு இணையான ஒரு புகழை பெற்ற காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் குமரிமுத்து. கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து ஒரு அபார வெற்றியை இந்த சினிமாவில் அவர் அடைந்து இருக்கிறார். எத்தனையோ குறைகள் இருந்தாலும் அந்த குறை தான் நாளை உலகை வெல்ல காரணமாக இருக்கும் ஆயுதம் என சொல்வார்கள். அதே மாதிரி தான் […]

By :  Rohini
Update: 2024-06-13 02:48 GMT

kumari

Actor Kumarimuthu: தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் இவர்கள் நகைச்சுவையில் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வந்தார்களோ அதே போல் அவர்களுக்கு இணையான ஒரு புகழை பெற்ற காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் குமரிமுத்து. கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து ஒரு அபார வெற்றியை இந்த சினிமாவில் அவர் அடைந்து இருக்கிறார்.

எத்தனையோ குறைகள் இருந்தாலும் அந்த குறை தான் நாளை உலகை வெல்ல காரணமாக இருக்கும் ஆயுதம் என சொல்வார்கள். அதே மாதிரி தான் குமரிமுத்துவின் கண்களில் குறை இருந்தாலும் அது தான் அவருக்கு ஒரு சிறந்த அடையாளத்தை இந்த சினிமாவில் பெற்று தந்தது. இந்த நிலையில் அவரின் மறைவுக்குப் பிறகு முதன்முதலாக குமரிமுத்துவின் மனைவியும் மகளும் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: தக் லைஃப்’ படத்தில் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து.. மீண்டும் மீண்டுமா?!.. அட இவருக்கா?…

குமரிமுத்து அவருடைய வாழ்க்கையில் அடிக்கடி ஒன்றை நினைத்து வேதனைப்பட்ட விஷயம் என்னவென்றால் அவருடைய குறையை பற்றி தான். படிக்கும் போது அவருடைய கண்ணை கிண்டல் பண்ணியதன் காரணமாகத்தான் தன்னுடைய படிப்பையே நிறுத்திக் கொண்டாராம் குமரிமுத்து. வெளியில் எங்கு போனாலும் ஒன்றை கண்ணா என்றுதான் கூப்பிடுவார்களாம்.

அது அவருக்கு மிகப்பெரிய வேதனையை தந்திருக்கிறது. இதைப் பற்றி அடிக்கடி வீட்டில் சொல்லி வருத்தப்பட்டது உண்டாம். நாடகத்தில் கொடி கட்டி பறந்த குமரி முத்து சினிமாவிலும் அதே மாதிரியான ஒரு புகழை பெற்றார். வீட்டில் தன்னுடைய மனைவியை ராணி போல் வைத்துக் கொள்வாராம். வீட்டு சாமான் என எல்லாவற்றையும் குமரிமுத்து தான் வாங்கி வந்து போடுவாராம்.

தன் மனைவியை பூப்போல பார்த்துக் கொண்டவர் குமரிமுத்து என அவருடைய மகள் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அவர் கிட்டத்தட்ட 50க்கும் மேலான டைரியை அவருடைய வாழ்க்கையில் எழுதி இருக்கிறாராம். கிட்டத்தட்ட 60களில் இருந்து எழுதிய அந்த டைரி இன்னும் வீட்டில் பத்திரமாக இருக்கிறதாம். அதை அவர்களுடைய குடும்பம் அவருடைய மறைவிற்கு பிறகு எடுத்து பார்த்து படித்தார்களாம் .

இதையும் படிங்க: பெரிய இயக்குனர்! அவர் இப்படி பண்ணுவாருனு நினைக்கல.. அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து போட்டுடைத்த நடிகை

அப்போதுதான் அவர்களுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிந்திருக்கிறது. அந்த டைரியில் அவர் வாங்கும் சம்பளத்தில் முக்கால்வாசி பணத்தை இல்லாதவருக்கு கொடுத்துவிட்டு தான் வருவாராம். யார் யாருக்கு பணத்தை கொடுத்து இருக்கிறேன்? எவ்வளவு கொடுத்திருக்கிறேன்? எதற்காக கொடுத்திருக்கிறேன் என்பதை அவருடைய டைரியில் எழுதி வைத்திருக்கிறாராம்.

அது ஆதாரத்துக்காக இல்லை .அவருடைய மன நிம்மதிக்காக எழுதி வைப்பாராம். அதேபோல் இவர் யாரிடமெல்லாம் பணம் வாங்கி இருக்கிறார் என்பதையும் அந்த டைரியில் எழுதி வைத்திருக்கிறாராம். இந்த டைரியை பார்த்த பிறகு தான் குடும்பத்திற்கு தெரிந்திருக்கிறது இவருடைய சம்பளத்தில் முக்கால்வாசி பணத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவி இருக்கிறார் என்பது.

ஒரு படத்தில் நடித்துவிட்டு பணத்தை கொண்டு வருவார் என மனைவி எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒன்றுமே இல்லாமல் தான் வருவாராம். கேட்டால் இன்று சம்பளம் கொடுக்கவில்லை என ஒரு சில காரணங்களை சொல்லி அதை தட்டிக் கழித்து விடுவாராம். இதைப் பற்றி அவருடைய மனைவி கூறும் போது ஆரம்பத்தில் எனக்குத் தெரிந்து ஒரு சில பேருக்கு உதவிகளை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: பெரிய இயக்குனர்! அவர் இப்படி பண்ணுவாருனு நினைக்கல.. அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து போட்டுடைத்த நடிகை

அப்போதெல்லாம் நான் அவரிடம் ‘கலைவாணர் மற்றவர்களுக்கு கொடுத்து கொடுத்து எதை சாதித்து இருக்கிறார்? அவரிடம் கடைசியில் ஒன்றுமே இல்லை. தனக்குப் போகத்தான் தானமும் தர்மம்’ என்று இவர் மனைவி கூறுவாராம். பொதுவாக ஒரு வீட்டில் பெண்கள் பண விஷயத்தில் மிகவும் கறாராகத்தான் இருப்பார்கள்.

அப்படித்தான் குமரிமுத்துவின் மனைவியும் இளையமகளும் ஏன் எல்லாத்தையும் இப்படி கொடுத்துட்டு இருக்கீங்க என கேட்பார்களாம். ஆனால் குமரிமுத்து தான் செய்யும் உதவியை என்றைக்கும் நிறுத்தியதில்லை. ஒரு நாள் அவருக்காக ஒரு விசிட்டிங் கார்டு அடித்துக் கொண்டு அதை தன் வீட்டில் வந்து காட்டினாராம்.

இதையும் படிங்க: 80ஸ் தான் தமிழ்சினிமாவின் பொற்காலம்… அதுக்கு இந்த ஒரு காரணமே போதும்..!

அதில் முதல் வரியாக ‘கொடுப்பதை தடுப்பவன் கடைசியில் ஒன்றுமே இல்லாமல் அழிவான்’ என்று எழுதி அச்சிட்டிருந்தாராம் குமரிமுத்து. அதிலிருந்தே அவருடைய மனைவி மற்றும் குடும்பம் இவர் செய்யும் உதவியை பற்றி கேட்கவே மாட்டார்களாம். ஆனால் இன்று அவருடைய குடும்பத்தை பார்க்க யாருமே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

Tags:    

Similar News