விஜயகாந்த் நினைவிடத்தில் மோகன் செய்த நெகிழ்ச்சி செயல்!.. அட இவரும் கேப்டன் ரசிகன் போல!..
80களில் தமிழ் சினிமாவில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கியவர் நடிகர் மோகன். இவரின் பல திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளது. ரஜினி, கமல் படங்களுக்கு இணையாக இவரின் படங்கள் வசூலை வாரிக்குவித்தது. இவருக்கு பெண் ரசிகைகளும் பலர் இருந்தனர்.
90களில் சில படங்களில் நடித்த மோகன் ஒரு கட்டத்தில் மொத்தமாக சினிமாவிலிருந்து விலகினார். 20 வருடங்களுக்கும் மேல் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. அதன்பின்னர்தான் ‘ஹரா’ என்கிற படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் பத்திரிக்கையாளராக மோகன் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஐயா உங்ககிட்ட நாங்க கேட்டது ஒரே ஒரு ‘க்’ தான? .. ட்ரோலுக்கு உள்ளான விஜய் கட்சியின் வைரல் போஸ்டர்…
அதோடு, விஜய் இப்போது நடித்து வரும் ‘கோட்’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் மோகன் நடித்து வருகிறார். இந்த படம் மோகனுக்கு நல்ல ஒரு ரீ எண்ட்ரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் மோகன் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி மரணமடைந்தார். அவரின் உடலுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அதேநேரம் திரையுலகை சேர்ந்த சில முக்கிய நடிகர்கள் சில நாட்கள் கழித்தே அவரின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையும் படிங்க: நடிகர் சங்கத்தை நம்பி மோசம் போன சேரன்! த்ரிஷாவுக்காக பேசி வீணாப் போச்சோ?
இது சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போதும் விஜயாகாந்தின் நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களும், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்.
இந்நிலையில்தான் நடிகர் மோகன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியதோடு, பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கினார். இதில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் கலந்து கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்...