நடிகரின் கெட்டப்பழக்கத்தால் படாத பாடுபட்ட ஸ்ரீதேவி!.. மனுசன் ரொம்ப டெராரா இருப்பார் போல!..

by சிவா |
sridevi
X

தமிழ் சினிமாவில் ‘மூன்று முடிச்சி’ படம் மூலம் அறிமுகமானாலும் பதினாறு வயதினிலே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. அழகு, நடிப்பு, கவர்ச்சி என எல்லாமே கொண்டவர். அப்போது இருந்த இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் இவர். இவரை பார்த்து சினிமாவுக்கு வந்த இயக்குனர்கள் கூட இருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளுக்கும் சென்று நம்பர் ஒன் இடத்தை பிடித்த ஒரே நடிகை இவர்தான். ரஜினி, கமல் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். கமலுடன் பல நடிகைகள் நடித்திருந்தாலும் மிகவும் பொருத்தமான ஜோடியாக இருந்தவர் ஸ்ரீதேவிதான்.

இதையும் படிங்க: ரஜினிக்காக சாப்பிடாமல் விரதம் இருந்த ஸ்ரீதேவி… அதுக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

ரஜினியுடன் ஜானி உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாலிவுட்டில் நடிக்க போனபோது ஹிந்தி பட தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். அதன்பின் அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. சில ஹிந்தி படங்களில் மட்டும் நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

sridevi

இந்நிலையில், ஒரு நடிகரின் கெட்டப்பழக்கத்தில் ஸ்ரீதேவி படாதபாடு பட்ட சம்பம் பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஜோடி போட்டு நடித்த ஸ்ரீதேவி அவரின் சீனியர் என்.டி.ராமாராவுக்கும் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த படங்களும் அங்கு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க: எங்க குடும்பத்துல அவங்கதான் ஹிட்லர்!.. அருண் விஜய், ஸ்ரீதேவி உடைத்த குடும்ப ரகசியம்!

என்.டி.ராமாராவ் மிகவும் குறும்பு பிடித்தவராம். சொந்த வேலை காரணமாக எங்கேயாவது போக வேண்டியிருந்தால் எதையாவது செய்து படப்பிடிப்பு ரத்தாகும்படி செய்துவிடுவாராம். அதற்கு அவர் அதிகம் டார்கெட் செய்தது நடிகைகளைத்தானாம். ஒருமுறை ஸ்ரீதேவியுடன் ஒரு படத்தில் நடித்தபோது அவரை தண்ணியில் தள்ளிவிட்டு டிரஸ்ஸை நினைத்துவிட்டு படப்பிடிப்பை ரத்து செய்ய வைத்திருக்கிறார்.

அதேபோல் ஒருமுறை காரை ஓட்டி வந்து முன்னால் நின்று கொண்டிருந்த ஸ்ரீதேவியை லேசாக மோதிவிட்டு பிரேக் பிடிக்கவில்லை என சொல்லி அன்றைய படப்பிடிப்பை ரத்து செய்ய வைத்தாராம். ஸ்ரீதேவி பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் அவரை இப்படியெல்லாம் செய்தது என்.டி.ராமாராவ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story