அஜித் அந்த மாதிரி படத்துல நடிச்சா தியேட்டர் பிச்சுக்கும்! நடிப்பாரா? பார்த்திபன் சொன்ன தகவல்

Ajith Parthiban: சமீபத்தில் அஜித்தை பற்றி பார்த்திபன் கூறிய ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அஜித்தும் பார்த்திபன் இணைந்து ஏற்கனவே  நீ வருவாய் என மற்றும் உன்னைக் கொடு என்னை தருவேன் போன்ற திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அந்தப் படத்தின் போது நாங்கள் இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை என்று பார்த்திபன் முன்பு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த நிலையில் அஜித்தை பற்றி இப்போது ஒரு சூப்பரான தகவல் ஒன்றை அந்த பேட்டியில் […]

By :  Rohini
Update: 2024-05-28 05:51 GMT

par

Ajith Parthiban: சமீபத்தில் அஜித்தை பற்றி பார்த்திபன் கூறிய ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அஜித்தும் பார்த்திபன் இணைந்து ஏற்கனவே நீ வருவாய் என மற்றும் உன்னைக் கொடு என்னை தருவேன் போன்ற திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அந்தப் படத்தின் போது நாங்கள் இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை என்று பார்த்திபன் முன்பு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் அஜித்தை பற்றி இப்போது ஒரு சூப்பரான தகவல் ஒன்றை அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் பார்த்திபன். கோலிவுட்டில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் அஜித். பொழுதுபோக்கு நேரங்களில் தன்னுடைய பைக் ரைடயும் தொடர்ந்து கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: 160 நாட்கள் ஷூட்டிங் போகாத சிம்பு!.. சம்பளத்தில் கை வைத்த தயாரிப்பாளர்!.. இதெல்லாம் தேவையா?!..

சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் சாலையோரம் அவர் பைக் பயணம் செய்யும் ஒரு வீடியோ வெளியாகி மிகவும் ட்ரெண்டாகி வருகின்றது. இப்படி சினிமாவையும் தாண்டி தனது பொழுதுபோக்கு அம்சங்களில் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வருகிறார் அஜித். இந்த நிலையில் அஜித் வில்லனாக நடித்தால் மிக நன்றாக இருக்கும் என்பது மாதிரி பார்த்திபன் கூறியிருப்பது மிகவும் வைரலாகி வருகின்றது.

வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் முதலில் நடிக்க தெரிய வேண்டும். அது அஜித்துக்கு நன்றாகவே வருகிறது. இல்லையென்றால் ஆரம்பத்திலேயே வாலி போன்ற படங்களில் அவர் அப்படி ஒரு வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்க முடியுமா? அதுவரைக்கும் லவ் பாயாக சார்மிங் ஹீரோவாகவே பார்த்து வந்த நமக்கு திடீரென வில்லன் என பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் நடிக்க இருந்த படத்தில் அந்த நடிகரா? ஹீரோயினால் கல்லா கட்டலாம் போலயே!…

ஆனால் மிக அற்புதமாகவே நடித்திருந்தார். இதைப் போல ஜோக்கர் மாதிரியான திரைப்படங்களில் அஜித் நடித்தால் தியேட்டரே பிச்சிக்கும். ஏனெனில் எல்லா கொலைகளையும் செய்து விட்டு ஒரு சாதாரண மனிதராக இருக்கும் கதாபாத்திரம்தான் ஜோக்கர். அந்த அளவுக்கு ஜோக்கர் நமக்கு பரீட்சியமானவரும் கிடையாது. அதைப்போல அஜித்தும் பரீட்சியமானவர் இல்லை.

இருந்தாலும் இதைப் போன்ற ஒரு படத்தில் அவர் நடித்தால் மிக அற்புதமாக இருக்கும். அவருடைய கேரக்டருக்கும் இது ஒத்துப் போகும் என அஜித்தை புகழ்ந்து பார்த்திபன் தெரிவித்திருக்கிறார். வாலி திரைப்படத்திற்கு பிறகு அஜித் வில்லனாக நடித்த திரைப்படம் மங்காத்தா. அந்த படத்தில் வில்லன் ஹீரோ என இரு விதங்களில் நடித்து மாஸ் காட்டி இருப்பார் அஜித்.

இதையும் படிங்க: அடக் கொடுமையே! ‘ராயன்’ படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? ரிலீஸில் இப்படி ஒரு சிக்கலா?

அதைப்போல இன்னொரு முறை நடிப்பாரா என்று ரசிகர்களும் ஏங்கிக் கொண்டுதான் வருகிறார்கள். குட் பேட் அக்லி திரைப்படத்தில் மூன்று வேடம் என சொல்லப்படுகிறது. ஆனால் அது எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்ன மாதிரியான கதைகளம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவும் அஜித்தின் தீவிர வெறியரான ஆதிக் அஜித்தை எப்படி எல்லாம் ரசித்து இந்த படத்தில் காட்டப் போகிறார் என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News