நாட்டாமை படத்துல பொன்னம்பலம் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா!.. என்னமோ நினைச்சா!.. அடப்பாவமே!..

Actor ponnambalam: தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கும் மேல் வில்லனாக பல திரைப்படங்களில் கலக்கியவர் பொன்னம்பலம். நல்ல உயரம்.. ஆஜானுபாகுவான உடல். மிரட்டும் லுக் என ரசிகர்களை பயப்பட வைத்தவர் இவர். பெரும்பாலும் மெயின் வில்லன்களுக்கு அடியாளாக வருவார். விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஒன் டூ ஒன் சண்டை போடும் வில்லன் நடிகர் இவர். விஜயகாந்தின் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். பொன்னம்பலத்திற்கு பல வகைகளிலும் விஜயகாந்த் உதவியிருக்கிறார். பொன்னம்பலம் பணப்பிரச்சனையில் சிக்கிய […]

Update: 2023-11-03 00:56 GMT

Actor ponnambalam: தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கும் மேல் வில்லனாக பல திரைப்படங்களில் கலக்கியவர் பொன்னம்பலம். நல்ல உயரம்.. ஆஜானுபாகுவான உடல். மிரட்டும் லுக் என ரசிகர்களை பயப்பட வைத்தவர் இவர். பெரும்பாலும் மெயின் வில்லன்களுக்கு அடியாளாக வருவார்.

விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஒன் டூ ஒன் சண்டை போடும் வில்லன் நடிகர் இவர். விஜயகாந்தின் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். பொன்னம்பலத்திற்கு பல வகைகளிலும் விஜயகாந்த் உதவியிருக்கிறார். பொன்னம்பலம் பணப்பிரச்சனையில் சிக்கிய போதெல்லாம் விஜயகாந்த் அவருக்கு வாய்ப்பு கொடுத்து உதவியிருக்கிறார்.

இதையும் படிங்க: வடிவேலு உனக்கு தில் இருந்தா விஜயகாந்துகிட்ட நேர்ல இத கேட்பியா?!.. சவால் விட்ட பொன்னம்பலம்!…

ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு தனக்கு பெரிய நடிகர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், சில சின்ன நடிகர்கள் மட்டுமே அவருக்கு உதவினார்கள். நடிகர் சிரஞ்சீவி இவரை அப்போலோ மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்ததாக சொல்லி அவருக்கு நன்றி சொல்லி உருகினார் பொன்னம்பலம்.

கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துகொண்டார். தற்போது உடல்நிலை காரணமாக பொன்னம்பலம் சினிமாவில் நடிப்பதில்லை. எனவே, தொடர்ந்து் ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். பொன்னம்பலம் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வில்லன் நடிகராக அவர் புகழடைந்தது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட் அடித்த நாட்டாமை திரைப்படம்தான்.

இதையும் படிங்க: நான் கேட்டது அதுதான்!. ஆனா விஜயகாந்த் கொடுத்தது மறக்கவே முடியாது!. உருகும் பொன்னம்பலம்…

இந்த படத்தில் அசத்தல் வில்லனாக பொன்னம்பலம் கலக்கியிருப்பார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பொன்னம்பலம் ‘நான் நிறைய படங்களில் நடித்ததால் என்னிடம் ரூ.500 கோடிக்கும் மேல் பணம் இருக்கும் என எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை. நான் சம்பாதித்த பணங்களில் பெருமளவு உறவுமுறைகளுக்கு நல்ல காரியம் நடக்கும்போது செலவு செய்துவிட்டேன்.

நாட்டாமை படத்தில் எனக்கு பேசப்பட்ட சம்பளம் 32 ஆயிரம்.. பேட்டா 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 37 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அந்த படத்தில் எனக்கு நல்ல வேடம். எனவே இலவசமாக நடி என என் சகோதரர் சொன்னார். 32 நாட்கள் கால்ஷீட்.. தினமும் ஆயிரம் வாங்கிக்கொள் என்றார்.. அப்படத்தை தயாரித்த சூப்பர்ஹிட் பிலிம்ஸ் நிறுவனத்தில் என் நண்பர் மேனேஜராக இருந்தார். எனவே, நான் குறைந்த சம்பளம் மட்டுமே வாங்கினேன்’ என பொன்னம்பலம் கூறினார்.

இதையும் படிங்க: சினிமாவே வேண்டாம்!.. பொன்னம்பலம் எடுத்த முடிவு.. களத்தில் இறங்கி காரியம் சாதித்த விஜயகாந்த்…

Tags:    

Similar News