இந்த கேள்விய கேட்காதீங்க.. பதில் வராது! விமான நிலையத்தில் நிருபர்களுக்கு டாட்டா காட்டிய ரஜினி
Actor Rajini: தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக கோலோச்சி வரும் நடிகர் ரஜினிகாந்த். அன்றும் என்றும் இன்றும் சூப்பர் ஸ்டார் என மக்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினி. தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் ரஜினியை விமான நிலையத்தில் அவ்வப்போது பார்க்க முடிகின்றது. சில தினங்களுக்கு முன்புதான் வேட்டையன் படப்பிடிப்பிற்காக விமான நிலையத்திற்கு வந்தார் ரஜினி. இப்போது மீண்டும் அந்தப் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார். அவர் போகும் போதும் வரும் […]
Actor Rajini: தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக கோலோச்சி வரும் நடிகர் ரஜினிகாந்த். அன்றும் என்றும் இன்றும் சூப்பர் ஸ்டார் என மக்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினி. தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் ரஜினியை விமான நிலையத்தில் அவ்வப்போது பார்க்க முடிகின்றது.
சில தினங்களுக்கு முன்புதான் வேட்டையன் படப்பிடிப்பிற்காக விமான நிலையத்திற்கு வந்தார் ரஜினி. இப்போது மீண்டும் அந்தப் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார். அவர் போகும் போதும் வரும் போதும் பத்திரிக்கையாளர்கள் ரஜினியை சூழ்ந்து படத்தை பற்றி எதாவது சொல்வாரா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: போட்றா வெடியா! ரிலீசான அஜித்- ஆதிக் படத்தின் டைட்டில்… என்னங்க இப்படி எல்லாம் இறங்கிட்டீங்க?
வேட்டையன் படத்தின் அப்டேட் என கேட்டால் படம் நன்றாக வந்திருக்கிறது என ஒரே வரியால் சொல்லிவிட்டு பறந்து சென்று விடுகிறார். மின்னல் வேகத்தில் வரும் ரஜினியை யாரும் நெருங்கவும் முடியவில்லை. அதே போல் இன்று விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம் நிருபர் ஒருவர் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் என தன் கேள்வியை கேட்க, உடனே ரஜினி அரசியல் பற்றியெல்லாம் கேட்க கூடாது.
பதில் சொல்ல மாட்டேன் என கூறிவிட்டு உடனே காரில் ஏறி பறந்து சென்று விட்டார். ஏனெனில் இப்போது அரசியல் மிகவும் சூடுபிடித்திருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் ஆளாளுக்கு ஒரு பக்கம் தங்கள் கட்சிக்காக பரிதவித்துக் கொண்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி’யில் தாமுவுடன் இணையப்போகும் பிரபலம்! இந்த ஹீரோவா?
சரத்குமார் மத்தியில் ஆளும் அரசுடன் கூட்டணி, கமல் தமிழக ஆளும் கட்சியுடன் கூட்டணி, விஜயின் தமிழக வெற்றிக்கழகம், என களைகட்டுகிறது. இதில் ரஜினி யாருக்கு ஆதரவாக நிற்க போகிறார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கும். அதை தெரிந்து கொள்வதற்காகவே ரஜினியிடம் தேர்தல் குறித்து கேள்வியை தொடங்கினர்.
ஆனால் வாயை திறந்தால் மாட்டிக் கொள்வோம் என்று கருதி ரஜினி இதற்கு பதில் சொல்ல மாட்டேன் என ஒரேடியாக தப்பித்துக் கொண்டார். இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: ஆசைப்பட்ட ஃபாரின் சரக்கு கிடைக்கலயே!.. கோபத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்..