அடேங்கப்பா என்ன ஒரு ஞாபகசக்தி!.. அண்ணாவையே அசர வைத்த சிவாஜி!..
தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகத்தின் நடிப்பை அனைத்து நடிகர்களுக்கும் ஒரு அகராதி என்றே சொல்லலாம். எந்த ஒரு கதாபாத்திரம் ஆனாலும் அதை இயல்பாக நடித்து அசத்திவிடுவார். அதே போல் எந்த ஒரு நடிகர் நடித்தாலும் அதில் சிவாஜியின் சாயல் இல்லாமல் இருக்காது. இப்பேற்பட்ட அசாத்திய திறமை சிவாஜிக்கு சிறு வயதிலேயே இருந்தது. நாடகத்தின் மேல் அவருக்கு இருந்த ஆர்வம்தான் இதற்குக் காரணம். சிவாஜியின் இயற்பெயர் கணேசன். அவருக்கு சிவாஜி என்ற பட்டம் எப்படி கிடைத்தது? அதுற்கு என்ன […]
தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகத்தின் நடிப்பை அனைத்து நடிகர்களுக்கும் ஒரு அகராதி என்றே சொல்லலாம். எந்த ஒரு கதாபாத்திரம் ஆனாலும் அதை இயல்பாக நடித்து அசத்திவிடுவார். அதே போல் எந்த ஒரு நடிகர் நடித்தாலும் அதில் சிவாஜியின் சாயல் இல்லாமல் இருக்காது. இப்பேற்பட்ட அசாத்திய திறமை சிவாஜிக்கு சிறு வயதிலேயே இருந்தது. நாடகத்தின் மேல் அவருக்கு இருந்த ஆர்வம்தான் இதற்குக் காரணம். சிவாஜியின் இயற்பெயர் கணேசன். அவருக்கு சிவாஜி என்ற பட்டம் எப்படி கிடைத்தது? அதுற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
சிவாஜி சிறு வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்து விட்டு தானும் அதே போன்று வேடம் ஏற்று நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதுதான் அவருக்கு நாடகம் ஏற்படக் காரணமானது. 7வது வயதிலேயே அவர் ராமாயணம் நாடகத்தில் நடித்து விட்டார். அதுவும் அவருக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரம் சீதை. பெண் வேடத்தில் நடித்து அசத்தினார்.
அறிஞர் அண்ணாவின் சந்திர மோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வேடத்தில் வி.சி.கணேசன் நடித்தார். அவருடன் தற்செயலாக அண்ணா பிராமணப் பாதிரியார் காகா பட்டர் வேடத்தில் நடித்துள்ளார். சிவாஜி நடித்த கதாபாத்திரத்திற்காக தந்தை பெரியாரிடம் இருந்து பாராட்டுகள் வந்து குவிந்தன.
1945ல் 7வது சுயமாியாதை மாநாடு சென்னையில் நடைபெற்றது. அண்ணாத்துரை ஒரு நாடகத்தை அங்கு அரங்கேற்ற எழுதியிருந்தார். அது ஒரு தமிழர் அல்லாத தலைவர் சத்ரபதி சிவாஜியை அடிப்படையாகக் கொண்டது. இந்த நாடகத்தில் அண்ணாவே சிவாஜியின் குருவாக நடித்தார். அரசர் ஷத்திரியராகப் பிறக்காததால் தனது முடிசூட்டுக்கு முன்பு உள்ளூர் புரோகிதப் பிராமணர்களால் சந்திக்க சிரமங்கள் ஏற்பட்டன.
அப்போது என்எஸ்கே ஒரு பிளாக்மெயிலர் கொலைக்காக கைது செய்யப்பட்டார். அதனால் அவரது நாடக உலகம் புரவலர்கள் கிடைக்காமல் தொய்வடைந்தது. அதனால் அங்கு வேலை செய்த கலைஞர்கள் வெவ்வேறு இடங்களுக்கு வாய்ப்பு தேடிச் சென்றனர். அப்போது விழுப்புரம் கணேசன் மேடை நாடங்களில் பெண் வேடங்களில் நடித்து அசத்தினார்.
காஞ்சிபுரத்திற்குச் சென்ற அவர் அண்ணாவின் வீட்டில் திராவிட நாடு பத்திரிகையில் சின்ன சின்ன வேலைகளைச் செய்து வந்தார். அவர் கைப்பிரதிக்கான அச்சு இயந்திரத்தை இயக்க உதவினார். எழுத்துருக்களையும் உருவாக்க உதவினார். கணேசனை அருகில் இருந்து கவனித்தார் அண்ணா. அப்போது அவரிடம் சிவாஜியின் முக்கிய வேடத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்டார். அதைக் கேட்ட கணேசன் அதிர்ச்சியடைந்தார்.
ஆனால் அண்ணா அவரை முயற்சி செய்து பாரப்பா என்று ஸ்கிரிப்டைக் கொடுத்தார். சுமார் 6 மணி நேரம் கழித்து அண்ணா திரும்பி வந்தார். கணேசன் ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்திருந்தார். மேலும் நாடகத்தில் இருந்த அனைத்துக் கதாபாத்திரங்களையும் ஒன்று விடாமல் சொன்னார். அந்த நாடகத்தை அரங்கேற்றும் போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்று முதல் நீங்கள் சிவாஜி எனறார் பெரியார்.